Just In
- 35 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.32 லட்சத்தில் வெளிவந்துள்ள புதிய எம்வி அகுஸ்டா பைக்!! வெறும் 110 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது
எம்வி அகுஸ்டா நிறுவனம் அதன் சர்வதேச சந்தைக்கான புதிய சூப்பர்வெலோஸ் ஆல்பைன் மோட்டார்சைக்கிளை பற்றிய விபரங்களை படங்களுடன் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்வி அகுஸ்டா மற்றும் பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ஆல்பைன் பிராண்ட்களின் கூட்டணி மூலமாக வெளிவந்துள்ள புதிய சூப்பர்வெலோஸ் ஆல்பைன் பைக், வழக்கமான சூப்பர்வெலோஸ் 800 மோட்டார்சைக்கிளின் லிமிடேட் எடிசன் ஆகும்.

இந்த ஸ்பெஷல் எடிசன் பைக், அல்பைன் 110 ஸ்போர்ட்ஸ் காரை முன் உதாரணமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் காரின் பெயருக்கு ஏற்றாற்போல் இந்த லிமிடேட் எடிசன் பைக் வெறும் 110 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.

எம்வி அகுஸ்டாவின் இந்த புதிய மோட்டார்சைக்கிள் நீல ஆல்பைன் மற்றும் அகோ சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் மோட்டார்சைக்கிளின் பெரும்பான்மையான பகுதிகள் கார்பன்-ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெரும்பான்மையான பகுதிகளில் வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஃபேரிங், முன் &பின் ஃபெண்டர், என்ஜின் மீது தூசி படுவதை தடுக்கும் கவர்கள் மற்றும் சங்கிலி பாதுகாப்பான் உள்ளிட்டவை அடங்குகின்றன. பைக்கின் பெட்ரோல் டேங்கிற்கு கீழே ‘A' என்ற எழுத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இது நேரடியாக ஆல்பைன் பிராண்டை குறிக்கிறது. இதனுடன் விற்பனை செய்யப்படவுள்ள 110 யூனிட்கள் ஒவ்வொன்றிலும் 001-இல் இருந்து 110 வரையில் எண்கள் பொறிக்கப்படவுள்ளன. முன்பக்க ஃபெண்டர்களில் இத்தாலி மற்றும் பிரெஞ்சு நாட்டு கொடிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் டேங்கின் மூடி லெதர் தோல்வார் ஒன்றினால் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்பைன் பிராண்டின் பெயர் உள்ளது. இவற்றுடன் பளிச்சிடும் நீல நிற தையல்களுடன் பைக் ப்ரீமியம் தரத்திலான அல்காண்ட்ரா மெத்தைகளை இருக்கைக்காக கொண்டுள்ளது.

இயந்திர அமைப்பில் எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸ் ஆல்பைன் பைக்கில் எந்த மாற்றமும் இல்லை. எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸ் 800 பைக்கில் வழக்கமாக வழங்கப்படும் 798சிசி 3-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் தான் தொடரப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 13,250 ஆர்பிஎம்-ல் 153 பிஎச்பி மற்றும் 10,100 ஆர்பிஎம்-ல் 88 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜின் உடன் ஸ்லிப்பர்-க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் கியரை விரைவாக எலக்ட்ரானிக் மூலமாக மேலும் கீழும் மாற்ற முடியும். சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் 43மிமீ தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் செட்அப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டையும் முழுவதுமாக அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ள முடியும். ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் சக்கரத்தில் 320மிமீ இரட்டை டிஸ்க்குகளும், பின் சக்கரத்தில் 220மிமீ சிங்கிள் டிஸ்க்கும், ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

பைக்கின் 17 இன்ச் சக்கரங்களில் பைரெல்லி டியாப்லோ ரோஸ்ஸா கோர்ஸா 2 ரப்பர் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த லிமிடேட் எடிசன் பைக்கின் விலை 36,300 யூரோக்களாக (கிட்டத்தட்ட ரூ.32.44 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.