இத்தாலி கொடியின் நிறத்தில் எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸின் லிமிடேட் எடிசன்!! முன்பதிவுகள் நடைபெறுகிறது

எம்வி அகுஸ்டா பிராண்ட் அதன் 75வது ஆண்டுநிறைவு விழாவை கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு சூப்பர்வெலோஸ் மாடலில் வெளியிடப்பட்டுள்ள லிமிடேட் எடிசனை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இத்தாலி கொடியின் நிறத்தில் எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸின் லிமிடேட் எடிசன்!! முன்பதிவுகள் நடைபெறுகிறது

எம்வி அகுஸ்டாவின் 75வது ஆண்டுநிறைவை முன்னிட்டு வெளிவருவதால் சூப்பர்வெலோஸின் புதிய லிமிடேட் எடிசன் வெறும் 75 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.

இத்தாலி கொடியின் நிறத்தில் எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸின் லிமிடேட் எடிசன்!! முன்பதிவுகள் நடைபெறுகிறது

அதேபோல் இந்த நவம்பர் 14ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து 75 மணிநேரங்கள், அதாவது வரும் நவம்பர் 17ஆம் தேதி இரவு 9 மணி வரையில் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசன் சூப்பர்வெலோஸ் பைக் விற்பனையில் இருக்கும்.

இத்தாலி கொடியின் நிறத்தில் எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸின் லிமிடேட் எடிசன்!! முன்பதிவுகள் நடைபெறுகிறது

எம்வி அகுஸ்டாவின் சூப்பர்வெலோஸ் பைக்கின் வடிவமைப்பு பற்றி உங்கள் எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். கிட்டத்தட்ட அதே தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இதன் 75வது ஆண்டுநிறைவு எடிசன் சிவப்பு, வெள்ளை, பச்சை என்ற மூன்று நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

இத்தாலி கொடியின் நிறத்தில் எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸின் லிமிடேட் எடிசன்!! முன்பதிவுகள் நடைபெறுகிறது

சக்கரங்கள் தங்க நிறத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. பைக்கின் மேற்பகுதியில் சிவப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளதால், அது அப்படியே இருக்கைகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கின் செயல்திறனை அதிகரிக்க வரைபடத்துடன் ஐசியூ மற்றும் அம்பு வடிவிலான எக்ஸாஸ்ட் குழாயினை உரிமையாளர் பெறலாம்.

இத்தாலி கொடியின் நிறத்தில் எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸின் லிமிடேட் எடிசன்!! முன்பதிவுகள் நடைபெறுகிறது

ஆனால் இவற்றை பந்தய ட்ராக்கில் மட்டுமே பயன்படுத்த முடியும். சூப்பர்வெலோஸ் 800 பைக்கின் 798சிசி, இன்லைன் 3-சிலிண்டர் என்ஜின் தான் இதன் புதிய 75வது ஆண்டுநிறைவு எடிசன் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13,000 ஆர்பிஎம்-ல் 145 பிஎச்பி மற்றும் 10,600 ஆர்பிஎம்-ல் 88 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இத்தாலி கொடியின் நிறத்தில் எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸின் லிமிடேட் எடிசன்!! முன்பதிவுகள் நடைபெறுகிறது

பைக்கில் வழங்கப்படும் எலக்ட்ரானிக் தொகுப்பில் 8-நிலை ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், பை-டைரக்‌ஷ்னல் விரைவு ஷிஃப்டர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்குகின்றன. எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸ் 75வது ஆண்டுநிறைவு எடிசனிற்கான முன்பதிவுகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான முன்பதிவு தொகையாக 100 யூரோ (ரூ.8,820) வசூலிக்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கின் ஆரம்ப விலை ரூ.22,05,036-ல் நிர்ணயிக்கப்படவுள்ளது.

Most Read Articles

English summary
Re MV Agusta Superveloce 75 Anniversario limited edition revealed
Story first published: Sunday, November 15, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X