முன்பை விட கவர்ச்சிகரமான தோற்றத்தில் 2021 மோட்டோ குஸ்ஸி வி7 -இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்தியாவில் பியாஜியோ க்ரூப்-ஆல் நிர்வகிக்கப்பட்டுவரும் மோட்டோ குஸ்ஸி மோட்டார்சைக்கிள் பிராண்ட் அதன் புதிய வி7 பைக்கை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த பைக்கை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்பை விட கவர்ச்சிகரமான தோற்றத்தில் 2021 மோட்டோ குஸ்ஸி வி7 -இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

பழமையான மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தில் வழங்கப்படும் மோட்டோ குஸ்ஸி வி7 மோட்டார்சைக்கிளில் 2021ஆம் ஆண்டிற்காக பெரிய அளவிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

முன்பை விட கவர்ச்சிகரமான தோற்றத்தில் 2021 மோட்டோ குஸ்ஸி வி7 -இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதில் மிக முக்கிய அப்கிரேட் வி7 பைக்கின் பிரபலமான 90-டிகிரி வி-ட்வின் என்ஜின் அமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதவாது, இதற்கு முன்னர் இந்த பைக்கில் கிட்டத்தட்ட கடந்த பத்து வருடங்களாக 744சிசி என்ஜின் பொருத்தப்பட்டு வந்தது.

முன்பை விட கவர்ச்சிகரமான தோற்றத்தில் 2021 மோட்டோ குஸ்ஸி வி7 -இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அது தற்போது புதிய 850சிசி என்ஜினினால் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பைக் பெறும் என்ஜின் ஆற்றல் அளவுகளும் அதிகரித்துள்ளன. முன்பு இருந்த 744சிசி என்ஜின் 52 பிஎச்பி மற்றும் 59.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தியது.

முன்பை விட கவர்ச்சிகரமான தோற்றத்தில் 2021 மோட்டோ குஸ்ஸி வி7 -இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஆனால் புதிய 850சிசி என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 65 பிஎச்பி மற்றும் 72.9 என்எம் டார்க் திறனை பெற முடியும். என்ஜின் அமைப்பு மட்டுமின்றி, வி7 மோட்டார்சைக்கிளின் தோற்றத்திலும் 2021ஆம் ஆண்டிற்காக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

முன்பை விட கவர்ச்சிகரமான தோற்றத்தில் 2021 மோட்டோ குஸ்ஸி வி7 -இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதன்படி பைக்கின் ஹெட்லைட் & டெயில்லைட், பக்கவாட்டு பேனல்கள், மட்கார்ட் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய்களின் வடிவம் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதில் ஹெட்லைட் முழு-எல்இடி தரத்தில் புதிய வி7 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

முன்பை விட கவர்ச்சிகரமான தோற்றத்தில் 2021 மோட்டோ குஸ்ஸி வி7 -இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இவற்றுடன் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த 2021 மோட்டோ குஸ்ஸி பைக் பெற்றுள்ளது. முந்தைய வெர்சனை காட்டிலும் பைக்கின் பின்சக்கரம் பெரியதாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பின்சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ள சஸ்பென்ஷன் அமைப்பான ஷாக்ஸ் கயாபா நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.

முன்பை விட கவர்ச்சிகரமான தோற்றத்தில் 2021 மோட்டோ குஸ்ஸி வி7 -இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

வி7 பைக்கின் முந்தைய தலைமுறை ரோமன் எண்களால் குறிப்பிடப்பட்டு வந்தது. 2021 வெர்சன் வெறுமனே வி7 என மட்டுமே அழைக்கப்படவுள்ளது. அதேபோல் பைக்கின் வேரியண்ட்களின் எண்ணிக்கையையும் தயாரிப்பு நிறுவனம் குறைத்துள்ளது.

முன்பை விட கவர்ச்சிகரமான தோற்றத்தில் 2021 மோட்டோ குஸ்ஸி வி7 -இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அதாவது, 2020 மோட்டோ குஸ்ஸி வி7 பைக் நான்கு விதமான வேரியண்ட்களில் வழங்கப்பட்டது. ஆனால் 2021 வி7, வி7 ஸ்டோன் மற்றும் வி7 ஸ்பெஷல் என்ற இரு வேரியண்ட்களில் மட்டுமே சந்தைப்படுத்தபடவுள்ளது.

முன்பை விட கவர்ச்சிகரமான தோற்றத்தில் 2021 மோட்டோ குஸ்ஸி வி7 -இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதில் வி7 ஸ்பெஷல் வேரியண்ட் பிரத்யேகமான இராணுவ-நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படும். அதுமட்டுமின்றி சில்வர் நிறமும் பைக்கை சுற்றிலும் காட்சியளிக்கும். இந்த வேரியண்ட்டில் வயர்-ஸ்போக் சக்கரங்கள் வழங்கபட, இருக்கைகள் ப்ரவுன் நிறத்தில் இருக்கும்.

முன்பை விட கவர்ச்சிகரமான தோற்றத்தில் 2021 மோட்டோ குஸ்ஸி வி7 -இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அதேநேரம், வி7 ஸ்டோன் வேரியண்ட் நீரோ ருவிடோ, அஸ்ஸுரோ கியாசியோ, மற்றும் அரான்சியோன் ரேம் என்ற மூன்று நிறத்தேர்வுகளில் கிடைக்கும். புதிய மோட்டோ குஸ்ஸி பைக் சர்வதேச சந்தைகளில் அடுத்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனையை துவங்கவுள்ளது. இதன் இந்திய வருகை குறித்த எந்த தகவலும் இல்லை.

Most Read Articles

English summary
New Moto Guzzi V7 unveiled; gets major changes for 2021
Story first published: Wednesday, December 16, 2020, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X