பஜாஜ் ஆர்எஸ்400 ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகம்... அடுத்து இந்தியா?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய ஆர்எஸ்400 ஸ்போர்ட்ஸ் பைக்கை விரைவில் இந்தோனேஷியாவில் வைத்து உலகளாவிய அளவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்து இந்தியாவிலும் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்பதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பஜாஜ் ஆர்எஸ்400 ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகம்... அடுத்து இந்தியா?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது அந்த நிறுவனத்தின் டோமினார் 400 பைக்தான் விலை உயர்ந்த மாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆர்எஸ்400 என்ற முழுமையான ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலையும் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

பஜாஜ் ஆர்எஸ்400 ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகம்... அடுத்து இந்தியா?

கடந்த 2014ம் ஆண்டு நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் எஸ்எஸ்400 மற்றும் சிஎஸ் 400 என்ற இரண்டு பைக் மாடல்களை காட்சிப்படுத்தி இருந்தது. இதில், சிஎஸ் 400 கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல் டோமினார் 400 என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது.

பஜாஜ் ஆர்எஸ்400 ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகம்... அடுத்து இந்தியா?

இந்த நிலையில், எஸ்எஸ் 400 மாடலின் அடிப்படையிலான மாடலானது 200சிசி எஞ்சினுடன் ஆர்எஸ்200 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 400சிசி ரகத்திலான ஆர்எஸ் 400 மாடலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

பஜாஜ் ஆர்எஸ்400 ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகம்... அடுத்து இந்தியா?

புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400 பைக் மாடலானது வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக இவன்பனரன் என்ற இந்தோனேஷிய இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பஜாஜ் ஆர்எஸ்400 ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகம்... அடுத்து இந்தியா?

புதிய பல்சர் ஆர்எஸ்400 பைக்கில் எல்இடி லைட்டுகள் கொண்ட இரட்டை ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ஸ்பிளிட் இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

பஜாஜ் ஆர்எஸ்400 ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகம்... அடுத்து இந்தியா?

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் பயன்படுத்தப்படும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் கொண்ட 373.3சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் புதிய பஜாஜ் ஆர்எஸ்400 பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 40 பிஎஸ் பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் இருக்கும்.

பஜாஜ் ஆர்எஸ்400 ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகம்... அடுத்து இந்தியா?

இந்தோனேஷியாவில் முதல் இன்னிங்சில் தோல்வி கண்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த முறை நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அங்கு வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. அதற்கு ஏதுவாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த பைக்கை அங்கு அறிமுகப்படுத்தி இந்தோனேஷியர்களின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் ஆர்எஸ்400 ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகம்... அடுத்து இந்தியா?

இதனிடையே, இந்தோனேஷியாவில் பல்சர் ஆர்எஸ்400 பைக் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை இல்லை. இருப்பினும், அங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் பட்சத்தில், அது நிச்சயம் இந்தியாவிலும் நிச்சயம் அறிமுகம் செய்யப்படும். எனவே, இந்த பைக் இந்தியர்கள் மத்தியிலும் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

Most Read Articles
English summary
According to media report, Bajaj Auto is planning to launch the all new Pulsar RS400 in Indonesia by August this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X