பிஎம்டபிள்யூ ஜி310 பிஎஸ்6 பைக் மாடல்கள் அறிமுக தேதி அறிவிப்பு!

பிஎஸ்-6 மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும், பிஎம்டபிள்யூ ஜி310பைக் மாடல்களின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 பிஎஸ்6 பைக் மாடல்கள் அறிமுக தேதி அறிவிப்பு!

பிரிமீயம் ரக பைக் விற்பனையில் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், பிஎம்டபிள்யூ பைக் கனவுடன் இருப்பவர்களுக்கு மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்களாக ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக் மாடல்களும் உள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310 பிஎஸ்6 பைக் மாடல்கள் அறிமுக தேதி அறிவிப்பு!

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் நேக்கட் ரகத்திலும், ஜி310 ஜிஎஸ் மாடலானது சாகச பயண வகை பைக் மாடலுக்கு உரிய கட்டமைப்பு அம்சங்களையும் பெற்றிருக்கின்றன.

பிஎம்டபிள்யூ ஜி310 பிஎஸ்6 பைக் மாடல்கள் அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த நிலையில், 300 முதல் 400சிசி வரையிலான பைக் மார்க்கெட்டில் போட்டி அதிகரித்து வருகிறது. மேலும், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பிஎம்டபிள்யூ ஜி310 பைக் மாடல்களுக்கு புதுப்பொலிவு தேவைப்பட்டது.

பிஎம்டபிள்யூ ஜி310 பிஎஸ்6 பைக் மாடல்கள் அறிமுக தேதி அறிவிப்பு!

அதன்படி, பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல்கள் வரும் அக்டோபர் 8ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310 பிஎஸ்6 பைக் மாடல்கள் அறிமுக தேதி அறிவிப்பு!

கடந்த மாதம் முதல் இந்த புதிய மாடல்களுக்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. மேலும், விற்பனைக்கு வருவதற்கு முன்னரே இந்த பைக் மாடல்களுக்கு ரூ.4,500 மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. மேலும், முன்கூட்டியே இந்த பைக்குகளை முன்பதிவு செய்வோருக்கு குறைவான வட்டி விகிதத்தில் சிறப்பு கடன் திட்டமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310 பிஎஸ்6 பைக் மாடல்கள் அறிமுக தேதி அறிவிப்பு!

புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக் மாடல்களில் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட 312சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33 பிஎஸ் பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 பிஎஸ்6 பைக் மாடல்கள் அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த பைக்கில் சில கூடுதல் சிறப்பம்சங்கள், சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி லைட்டுகள், மெல்லிய சைடு பேனல்கள், மாற்றத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 பிஎஸ்6 பைக் மாடல்கள் அறிமுக தேதி அறிவிப்பு!

புதிய மாடலில் வண்ண டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரைடு பை ஒயர், ஸ்லிப்பர் க்ளட்ச், மேம்படுத்தப்பட்ட புகைப்போக்கி அமைப்பு ஆகியவை கொடுக்கப்படும். இந்த புதிய மாடல்கள் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
BMW Motorrad has announced the launch date of the updated G 310 R and G 310 GS bike models for India.
Story first published: Wednesday, September 30, 2020, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X