Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கனடாவாசிகளுக்கான விலை குறைவான டாமன் எலக்ட்ரிக் பைக்குகள்- ஆனா விலையை கேட்டால் தலையே சுத்தும்
கனடாவை சேர்ந்த எலக்ட்ரிக் ஸ்டார்ட்அப் நிறுவனமான டாமன் அதன் ஆரம்ப நிலை எலக்ட்ரிக் மாடல்களை கனடாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்ப நிலை மாடல்களாக இருப்பினும் நம்மை தலை சுற்ற வைக்கும் அவற்றின் விலைகளை இந்த செய்தியில் பார்ப்போம்.

கனடாவில் டாமன் மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும் இப்போது வரையில் இந்த எலக்ட்ரிக் ஸ்டார்ட்அப் பிராண்டில் இருந்து அதன் அடையாள மாடலாக ஹைப்பர்ஸ்போர்ட்டும் அதன் கலெக்டர் எடிசன் மாடல்கள் மட்டும் தான் விற்பனை செய்யப்படுகின்றன.

அதிலும் கலெக்டர் எடிசன் மாடல்களாக ஹைப்பர்ஸ்போர்ட்டின் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்இ மாடல்கள் சமீபத்தில் தான் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலைகள் முறையே 19,995 மற்றும் 16,995 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வரிகள் மற்றும் கஸ்டம் பணிகளுக்கான கட்டணங்களை கணக்கில் எடுத்து கொள்ளாமல், மேலே குறிக்கப்பட்ட அமெரிக்க டாலர்கள் விலைகளை அப்படியே இந்திய ரூபாய்க்கு மாற்றினாலே ரூ.14.82 லட்சம் மற்றும் ரூ.12.60 லட்சம் என வருகிறது.

இதில் ரூ.12.6 லட்சம் என்பதுதான் இப்போதுவரையில் டாமனின் விலை குறைவான எலக்ட்ரிக் பைக்கின் விலையாக கருதப்படுகிறது. ஹைப்பர்ஸ்போர்ட் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்இ மாடல்களில் சிறிய பேட்டரி தொகுப்பு டி-ட்யூன் செய்யப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டில் விலை குறைவான எக்ஸ்இ மாடல் 11 கிலோவாட்ஸ்.நேரம் பேட்டரியை பெற்றுள்ளது. அதிகப்பட்சமாக 100 பிஎச்பி பவரில் பைக்கை இயக்க உதவும் இந்த பேட்டரி தொகுப்பை முழு சார்ஜ் செய்து மோட்டார்சைக்கிளை அதிகப்பட்சமாக 160கிமீ தூரத்திற்கு இயக்க முடியும்.

டாமனின் விலை குறைவான எலக்ட்ரிக் பைக் மாடலான இதுவே அதிகப்பட்சமாக மணிக்கு 200கிமீ வேகத்தில் இயங்கும் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அப்படியென்றால், ஹைப்பர்ஸ்போர்ட் எஸ்எக்ஸ்? இதன் அதிகப்பட்ச வேகம் 240kmph ஆகும்.

ஏனெனில் இதில் 15 கிலோவாட்ஸ்.நேரம் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 150 பிஎச்பி பவரை வழங்க உதவும் இதன் பேட்டரியை முழுவதும் சார்ஜ் நிரப்பி கொண்டு 240கிமீ தூரத்திற்கு பைக்கை இயக்கி செல்லலாம். டாமனின் ஹைப்பர்ஸ்போர்ட் மாடல்களின் தோற்றம் கிட்டத்தட்ட அப்ரில்லா ஆர்எஸ்660 மோட்டார்சைக்கிளை ஒத்து காணப்படுகிறது.

ஹைப்பர்ஸ்போர்ட்டின் கலெக்டர் எடிசன்களில் காப்பிலோட் மற்றும் ஷிஃப்ட் என்ற இரு நேர்த்தியான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் காப்பிலோட் என்பது ரைடரை எச்சரிக்கும் அமைப்பாகும். ஷிஃப்ட் ஆனது பைக்கை அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக மாற்றும்.

டாமன் ஹைப்பர்ஸ்போர்ட்டின் கலெக்டர் எடிசன் மாடல்கள் எப்போதோ அறிமுகமாக வேண்டியது, கொரோனாவினால் தாமதமாகியுள்ளது. கனடாவில் இதன் டெலிவிரிகள் எப்போது துவங்கப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் மிக விரைவில் நடக்கும். இவற்றுடன் ஹைப்பர்ஸ்போர்ட் எச்பி பைக்கையும் 2021ஆம் ஆண்டின் இறுதியில் கனடாவில் விற்பனைக்கு கொண்டுவர டாமன் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.