டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டுகாட்டி நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 மாடல் என்பதுடன், விலை குறைவான பனிகாலே மாடலாகவும் வந்துள்ளது. இந்த பைக்கின் முக்கிய விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர்ஸ்போர்ட் ரக மாடலாக புதிய பனிகாலே வி2 பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 'பேபி பனிகாலே' என்று செல்லமாக குறிப்பிடப்படும் இந்த பைக் மாடல் பனிகாலே வி4 மாடலின் டிசைன் அம்சங்களை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் பனிகாலே 959 பைக் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய பனிகாலே வி2 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும், டுகாட்டியின் முதல் பிஎஸ்6 மாடலாகவும் இது வந்துள்ளது.

 டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர்பைக்கில் 955சிசி எல்-ட்வின் சூப்பர் க்வாட்ரோ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பழைய 959 பனிகாலே மாடலுடன் ஒப்பிடுகையில், 5 பிஎச்பி கூடுதல் பவரையும், 2 என்எம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

 டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இதன் எஞ்சின் 70 சதவீத டார்க் திறனை 5,500 ஆர்பிஎம்,மில் வழங்கும் திறன் வாய்ந்தது. இதன்மூலமாக, வளைவுகளில் வேகத்தை குறைத்து, மீண்டும் உடனடியாக வேகமெடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

 டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த சூப்பர் பைக்கில் 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட் பொருத்தப்பட்டு இருக்கிறது. டுகாட்டியின் எவோ-2 டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வீலி கன்ட்ரோல் ஆகியவையும் மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.

 டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் பை - டைரக்ஷனல் குயிக் ஷிஃப்ட்டர் வசதியுடன் கூடிய எஞ்சின் பிரேக்கிங் கன்ட்ரோல் தொழில்நுட்பம் உள்ளது. இதனால், விரைவாக பைக்கின் வேகத்தை குறைத்துக் கொள்வதற்கு உதவி புரிவதுடன், சிறந்த பாதுகாப்பையும் வழங்கும்.

 டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக்கில் ஸ்போர்ட், ஸ்ட்ரீட், ரேஸ் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் 4.3 அங்குல டிஎஃப்டி ிரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக ரைடிங் மோடுகளை தெரிவு செய்து கொள்ளலாம்.

 டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி பனிகாலே வி4 பைக்கில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில், கூர்மையான தோற்றத்தை வழங்கும் எல்இடி ஹெட்லைட் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இரட்டை அடுக்கு தோற்றத்தை தரும் ஃபேரிங் பேனல்கள் உள்ளன.இந்த பைக்கில் ஷோவா ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய சாக்ஸ் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் இல்லை என்பது குறையாக உள்ளது.

 டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டுகா்டி பனிகாலே வி2 பைக்கில் முன்சக்கரத்தில் பிரெம்போ எம்4.32 மோனோபிளாக் காலிபர்கள் மற்றும் பிரெம்போ மாஸ்டர் சிலிண்டர்கள் கொண்ட இரண்டு 320 டிஸ்க்குகளுடன் கூடிய பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 17 அங்குல சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில் பைரெல்லி டயாப்லோ ராஸோ கார்ஸா 2 (120/70ZR17)டயரும், பின்சக்கரத்தில் பைரெல்லி டயாப்லோ ராஸோ கார்ஸா 2 (180/70 ZR17) டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

 டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக்கிற்கு ரூ.16.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, டுகாட்டி 959 பனிகாலே பைக் ரூ.14.74 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. டுகாட்டியின் பனிகாலே குடும்ப வரிசையிலான மிக குறைவான விலை பைக் மாடலாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati has launched the Panigale V2 supersport bike in India starting at Rs 16.99 lakh (ex-showroom).
Story first published: Wednesday, August 26, 2020, 14:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X