டுகாட்டி பனிகாலே வி4 வெளியீடு... ரேஸ் பைக் அம்சங்களுடன் பொது சாலைகளுக்கான சூப்பர் பைக்!

டுகாட்டி நிறுவனத்தின் புதிய பனிகாலே வி4 எஸ்பி என்ற புதிய சூப்பர் பைக் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டுகாட்டி பனிகாலே வி4 வெளியீடு... ரேஸ் பைக் அம்சங்களுடன் பொது சாலைகளுக்கான சூப்பர் பைக்!

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனம் தனது புதிய பைக் மாடல்களை சிறப்பு நிகழ்ச்சிகள் மூலமாக தொடர்ந்து உலக அளவில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று புதிய சூப்பர்ஸ்போர்ட் 950 மாடலுடன் சேர்த்து புதிய பனிகாலே வி4 எஸ்பி என்ற சூப்பர் பைக் மாடலையும் வெளியிட்டது.

டுகாட்டி பனிகாலே வி4 வெளியீடு... ரேஸ் பைக் அம்சங்களுடன் பொது சாலைகளுக்கான சூப்பர் பைக்!

டுகாட்டி பனிகாலே பைக்கிற்கு உலக அளவில் ரசிகர்கள் இருப்பது தெரிந்த விஷயம். இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் பனிகாலே வி4 எஸ்பி எடிசன் மாடலானது ரேஸ் டிராக் அம்சங்களுடன் கூடிய சாதாரண சாலைகளில் பயன்படுத்தும் சூப்பர் பைக் மாடலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி பனிகாலே வி4 வெளியீடு... ரேஸ் பைக் அம்சங்களுடன் பொது சாலைகளுக்கான சூப்பர் பைக்!

மேலும், இந்த புதிய பனிகாலே வி4 எஸ்பி பைக் மாடல் ஒவ்வொன்றும் தனி எண்கள் கொண்டதாக மிகவும் பிரத்யேகமானதாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என்பதுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

டுகாட்டி பனிகாலே வி4 வெளியீடு... ரேஸ் பைக் அம்சங்களுடன் பொது சாலைகளுக்கான சூப்பர் பைக்!

பனிகாலே எஸ் பைக்கின் பல முக்கிய பாகங்கள் பனிகாலே வி4 எஸ்பி பைக் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, சூப்பர்லெகரா மற்றும் வி4ஆர் பைக்குகளின் டிசைன் அம்சங்களும் இந்த பைக்கில் பிரதபலிக்கிறது.

டுகாட்டி பனிகாலே வி4 வெளியீடு... ரேஸ் பைக் அம்சங்களுடன் பொது சாலைகளுக்கான சூப்பர் பைக்!

புதிய டுகாட்டி பனிகாலே வி4 எஸ்பி பைக் மாடலில் 1,103சிசி டெஸ்மோசிடிசி ஸ்ட்ராடேல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின்தான் பனிகாலே வி4 மற்றும் வி4எஸ் ஆகிய சாதாரண மாடல்களில் பயன்படுத்தப்படுகின்றன.

டுகாட்டி பனிகாலே வி4 வெளியீடு... ரேஸ் பைக் அம்சங்களுடன் பொது சாலைகளுக்கான சூப்பர் பைக்!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 214 பிஎச்பி பவரையும், 124 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சூப்பர்லெகரா மற்றும் வி4ஆர் பைக்குகளை போலவே, இந்த பைக்கிலும் எஸ்டிஎம் எவோ எஸ்பிகே டிரை க்ளட்ச் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டுகாட்டி பனிகாலே வி4 வெளியீடு... ரேஸ் பைக் அம்சங்களுடன் பொது சாலைகளுக்கான சூப்பர் பைக்!

இந்த புதிய சூப்பர் பைக்கில் முன்புறத்தில் ஓலின்ஸ் NIX 30 ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டிடிஎக்ஸ் 36 ஷாக் அப்சார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பர் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய சஸ்பென்ஷன் அமைப்பு புதிதாக ஓட்டுபவர்களுக்கும் மிகச் சிறப்பான கையாளுமையை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி பனிகாலே வி4 வெளியீடு... ரேஸ் பைக் அம்சங்களுடன் பொது சாலைகளுக்கான சூப்பர் பைக்!

இந்த பைக்கில் 5 ஸ்போக் கார்பன் சக்கரங்கள் பொருத்ப்பட்டுள்ளன. சூப்பர்லெகரா பைக்கில் பயன்படுத்தப்படும் கார்பன் ஃபைபர் விங்லெட்டுகள்தான் இதிலும் இடம்பெற்றுள்ளன. பிரேக்குகளுக்கான மாஸ்டர் சிலிண்டர், பிரேக் காலிபர்கள், பிரெம்போ 330மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவையும் சூப்பர்லெகரா பைக் மாடலிருந்து இந்த பைக்கிற்கு பெற்று பயன்படுத்தப்படுகிறது.

டுகாட்டி பனிகாலே வி4 வெளியீடு... ரேஸ் பைக் அம்சங்களுடன் பொது சாலைகளுக்கான சூப்பர் பைக்!

புதிய டுகாட்டி பனிகாலே வி4 எஸ்பி பைக் மாடலில் டுகாட்டியின் பிரத்யேகமான டிடிசி எவோ 3 டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ரேஸ் ஏ மற்றும் ரேஸ் பி ரைடிங் மோடுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. வீலி கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், ஸ்லைடு கன்ட்ரோல், குயிக் ஷிஃப்ட்டர், கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி டேட்டா அனலைசர் கருவியுடன் கூடிய ஜிபிஎஸ் சாதனம் இடம்பெற்றுள்ளது.

டுகாட்டி பனிகாலே வி4 வெளியீடு... ரேஸ் பைக் அம்சங்களுடன் பொது சாலைகளுக்கான சூப்பர் பைக்!

புதிய டுகாட்டி வி4 எஸ்பி பைக் ஒரே ஒரு வண்ணத் தேர்வில் மட்டுமே வழங்கப்படும். அதாவது, சில்வர் வண்ண அலங்கார பாகங்களுடன் கூடிய கருப்பு வண்ணத் தேர்வில் வழங்கப்படும். அடுத்த ஆண்டு இந்த புதிய டுகாட்டி பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Italian super bike manufacturer, Ducati has unveiled the new Panigale V4 SP super bike today.
Story first published: Thursday, November 19, 2020, 17:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X