அசத்தும் அம்சங்களுடன் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் வெளியீடு

வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்ட புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், எஞ்சின் குறித்த முக்கியத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அசத்தும் அம்சங்களுடன் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் வெளியீடு

டுகாட்டி நிறுவனம் தனது புதிய பைக் மாடல்களை உலக அளவிலான பொது பார்வைக்கு கொண்டு வருவதற்கு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், மூன்றாவதாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் புதிய சூப்பர்ஸ்போர்ட் 950 மாடலை அந்நிறுவனம் இன்று வெளியிட்டு இருக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் வெளியீடு

வடிவமைப்பு, வசதிகள், எஞ்சின் என அனைத்து விதத்திலும் இந்த புதிய பைக் மாடல் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 மாடலானது டுகாட்டி பனிகாலே பைக் மாடலை மருவி வந்ததால், அதன் தோற்றத்திற்கு இணையான டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் வெளியீடு

புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, மறுவடிவமைப்புடன் கூடிய எல்இடி பகல்நேர விளக்கு அமைப்பு, சிறப்பான ஃபேரிங் பேனல்கள் கீழ் புறம் முழுவதுமான மறைப்பை தரும் வகையில் சைலென்சர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் வெளியீடு

இந்த பைக்கில், இரட்டை கேன்கள் கொண்ட சைலென்சர் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு மிக சவுகரியமான இருக்கை அமைப்பு, ஓட்டுதல் முறையுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் வெளியீடு

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக்கில் L-ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 937சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 110 பிஎச்பி பவரையு வெலிப்படுத்தும். இந்த எஞ்சின் யூரோ-5 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் வெளியீடு

இந்த பைக்கில் ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் என மூன்று விதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. மேலும், 4.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் வெளியீடு

இந்த பைக்கில் 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் உள்ளது. வளைவுகளில் திரும்பும்போது பைக் கீழே விழும் நிலை குறித்த எளிதாக கண்டறிந்து கார்னரிங் ஏபிஎஸ் தொழில்நுட்பத்துடன் இணைந்து பைக்கின் பாதுகாப்பை அதிகரிக்க உதவும். வீலி கன்ட்ரோல் சிஸ்டம், அதிக தரைப்பிடிப்பை கொடுக்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

அசத்தும் அம்சங்களுடன் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் வெளியீடு

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் மாடலானது அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதிக தொழில்நுட்ப வசதிகள், இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வர இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati has revealed the new SuperSport 950 bike in the third episode of its World Premiere.
Story first published: Thursday, November 19, 2020, 12:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X