புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பிரிமீயம் வகை க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலும் பல்வேறு பிரிமீயம் க்ரூஸர் மாடல்களை விற்பனையில் வைத்துள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய தனது 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

2020 மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் மிட்நைட் புளூ, ரிவர் ராக் கிரே சாலிட் ஆகிய ஒற்றை வண்ணத் தேர்வுகளிலும், ரிவர் ராக் கிரே - விவிட் பிளக் மற்றும் பில்லியர்டு ரெட் மற்றும் விவிட் பிளாக் ஆகிய இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிளில் 1,202 சிசி எவோலியூசன் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த வி-ட்வின் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 97 என்எம் டார்க் திறனை வழங்க வல்லதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஞ்சினில் எலெக்ட்ரானிக் சீக்குவென்ஷியல் போர்ட் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதா என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆனால், நிச்சயம் இது பிஎஸ்6 தரத்திற்கு இணையானதாக இருக்கும் என்று நம்பலாம்.

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இதே எஞ்சின்தான் ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட் ஸ்பெஷல் மோட்டார்சைக்கிளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஹார்லி டேவிட்சனின் இந்த எவோலூசன் எஞ்சின் டார்க் திறனை வெளிப்படுத்துவதில் மிகச் சிறந்ததாக போற்றப்படுகிறது. மேலும், இதுபோன்ற பிரம்மாண்ட வகை க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு டார்க் திறன் மிகச் சிறப்பாக இருக்க வேண்டியதும் அவசியமாக கருத முடியும்.

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிள் எஞ்சினில் சிறப்பான காற்று குளிர்விப்பு முறை உள்ளது. இதற்காக இலகுவான அலுமினியம் ஹெட் மற்றும் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், எஞ்சினுக்குள் வெப்பம் வெகுவாக கட்டுப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.

MOST READ: அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம் சார்

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளில் முன்சக்கரத்தில் 130 செக்ஷன் டயரும், பின்புறத்தில் 150 செக்ஷன் டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த டயர்கள் மோட்டார்சைக்கிளின் பிரம்மாண்டத்தை மேலும் ஒரு படி உயர்த்துவதாக அமைந்துள்ளது.

MOST READ: வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்ப்டடுள்ளது. இந்த பைக்கில் ஏராளமான பாதுகாப்பு மற்றும் சிறப்பு தொழில்நுட்ப அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், மிகவும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும்.

MOST READ: வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

தரையிலிருந்து 725 மிமீ உயரத்தில் இருக்கை அமைப்பு இருப்பதால், 255 கிலோ எடை கொண்ட இந்த மோட்டார்சைக்கிளை லாவகமாக கையாள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. வளைவுகளில் திரும்பும்போதும், நிறுத்தும்போது சிறப்பான கையாளுமையை ஓட்டுபவருக்கு வழங்கும்.

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் ரூ.10.77 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பிரம்மாண்ட தோற்றமும், தனித்துவமான சைலென்சர் சப்தமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் அம்சமாக கூறலாம்.

Most Read Articles

English summary
Harley-Davidson has launched new 1200 Custom cruiser motorcycle in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X