ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

புதிய தலைமுறை ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் அறிமுக தேதி விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

இந்தியாவின் தன்னிகரற்ற ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா விளங்குகிறது. குறிப்பாக, ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் விற்பனையில் அசத்தி வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும், சந்தைப் போட்டியையும் மனதில் வைத்து ஆக்டிவா ஸ்கூட்டரில் புதிய அம்சங்களுடன் ஹோண்டா அறிமுகப்படுத்தி வருகிறது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

அந்த வரிசையில், பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஆறாவது தலைமுறை மாடலாக ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹோண்டா ஆக்டிவா 6ஜி என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய மாடல் வரும் 15ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், 12 அங்குல அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள் இடம்பெற்றிருக்கும். முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் முக்கிய விஷயமாக இதன் 109.19 சிசி எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.96 பிஎஸ் பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

புரொகிராம்டு ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கிறது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் பிஎஸ்-6 மாடலில் இடம்பெற்றது போன்றே, இந்த ஸ்கூட்டரிலும் சப்தமில்லாமல் எஞ்சின் ஸ்டார்ட் செய்யும் புதிய தொழில்நுட்பம் கொடுக்கப்பட இருக்கிறது.

MOST READ: மஹிந்திரா கஸ்டோ மாடலில் வருகின்றது மின்சார ஸ்கூட்டர்..? பஜாஜ் சேத்தக்கிற்கு செம்ம டஃப் காத்திருக்கு!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

இந்த புதிய மாடலில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பதை தெரிந்துகொள்வதற்கான புதிய வசதியும் இடம்பெற்றிருக்கும்.

MOST READ: கியாவை இனி கையிலேயே பிடிக்க முடியாது.. பாதுகாப்பு தரத்தில் இத்தனை ஸ்டார்களா..? மகிழ்ச்சியில் மக்கள்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. இந்த சஸ்பென்ஷன் மேம்படுத்தப்படு இருக்கும் என்று தெரிகிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

MOST READ: பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வர இருக்கிறது. இந்த புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனையிலும் புதிய அத்யாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Honda motorcycles and scooters limited, has announced that the new genearation Activa 110 scooter launch date in India.
Story first published: Wednesday, January 1, 2020, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X