புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரிப் பணிகள் விரைவில் இந்தியாவில் துவங்கப்பட உள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் உலக அளவில் சிறந்த அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடலாக நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பான வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் வாடிக்கையாளர்களை வசியம் செய்து வைத்துள்ளது.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது

இந்த நிலையில், தொழில்நுட்பம், எஞ்சின் உள்ளிட்டவற்றில் மேம்படுத்தப்பட்ட புதிய ஆப்ரிக்கா ட்வின் பைக் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் முதல் டெலிவிரி கொடுப்பதற்கு ஹோண்டா திட்டம் போட்டு வைத்திருந்தது. முன்பதிவும் ஏற்கப்பட்டு வருகிறது.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது

ஆனால், அந்த திட்டத்தை கொரோனா வைரஸ் வந்து தவிடுபொடியாக்கிவிட்டது. இந்த சூழலில், வரும் ஜூலை மாதம் முதல் புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரி பணிகள் துவங்கப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது

அதேநேரத்தில், புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு மட்டுமே முன்பதிவு துவங்கப்பட உள்ளதாம். டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலின் டெலிவிரி பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் ஸ்டான்டர்டு மற்றும் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ரூ.15.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது

அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் பைக் கீழே விழுந்தால் பாதுகாக்கும் கூடுதல் ஃப்ரேம் அமைப்பு, அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடுதல் உயரம் கொண்ட விண்ட்ஷீல்டு கண்ணாடி, பெரிய பெட்ரோல் டேங்க், ஸ்போக் அலாய் வீல்கள், ட்யூ்லெஸ் டயர்கள், எஞ்சினை பாதுகாக்கும் பாஷ் பிளேட் ஆகியவை வழங்கப்படுகின்றன.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கில் 1084 சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சின் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வழங்கப்படுகிறது.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது

இந்த பைக்கில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத் கனெக்ட்டிவிட்டி, ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஹோண்டா செலக்டபிள் டிராக்ஷன் கன்ட்ரோல், 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட், 3 லெவல் வீலி கன்ட்ரோல், 6 விதமான ரைடிங் மோடுகள் உள்ளன.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கில் முன்புறத்தில் 230 மிமீ டிராவல் நீளம் கொண்ட ஷோவா 45 மிமீ கேட்ரிட்ஜ் டைப் இன்வெர்டெட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 220 மிமீ டிராவல் நீளம் கொண்ட மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 310 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தி்ல 256 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது

இந்த பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமமும் உள்ளது. ஆஃப்ரோடு பயன்பாட்டின்போது ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பத்தின் இயக்கத்தை அணைத்து வைக்கும் வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்திய சாகச பைக் பிரியர்களின் கனவு மாடலாக இது உள்ளது.

Most Read Articles
English summary
The 2020 Honda Africa Twin was launched in March just before the nation-wide lockdown came into effect. Bookings for the motorcycle began at the time of launch and the deliveries were expected to begin in May.
Story first published: Tuesday, June 23, 2020, 14:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X