புதிய ஹோண்டா சிபி1000ஆர் சூப்பர் பைக் வெளியீடு: இந்திய அறிமுகம் எப்போது?

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் கூடிய ஹோண்டா சிபி1000ஆர் சூப்பர் பைக் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய சூப்பர் பைக் குறித்த முக்கியத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹோண்டா சிபி1000ஆர் சூப்பர் பைக் வெளியீடு: இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக் ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரகத்தில் நேக்கட் பாடி ஸ்டைல் கொண்ட சூப்பர் பைக் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் வட்ட வடிவிலான ஹெட்லைட் முழுமையான எல்இடி விளக்குகளுடன் அட்டகாசமாக இருக்கிறது. வலிமையான சக்கரங்கள், சைலென்சர், டயர்கள் பைக்கை முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது.

புதிய ஹோண்டா சிபி1000ஆர் சூப்பர் பைக் வெளியீடு: இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்கில் 5 அங்குலத்திற்கு முழுமையான டிஎஃப்டி வண்ணத் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. யுஎஸ்பி சார்ஜர், ஹோண்டாவின் ஸ்மார்ட்ஃபோன் வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புளூடூத் இணைப்பு வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஹோண்டா சிபி1000ஆர் சூப்பர் பைக் வெளியீடு: இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 998சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 143 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

புதிய ஹோண்டா சிபி1000ஆர் சூப்பர் பைக் வெளியீடு: இந்திய அறிமுகம் எப்போது?

இந்த எஞ்சின் யூரோ -5 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. அதாவது, இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தர நிர்ணய விதிகளுக்கும் நிகரானதாக இருக்கிறது. இந்த எஞ்சினில் புதிய ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இருப்பதால், செயல்திறன் மிக சிறப்பாகவும், மென்மையான ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்கும்.

புதிய ஹோண்டா சிபி1000ஆர் சூப்பர் பைக் வெளியீடு: இந்திய அறிமுகம் எப்போது?

ஹோண்டா சிபி1000ஆர் பைக் இரண்டு வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. அதாவது, ஸ்டான்டர்டு வேரியண்ட்டிலும், பிளாக் எடிசன் என்ற விசேஷ வண்ணத் தேர்வு கொண்ட வேரியண்ட்டிலும் கிடைக்கும். பிளாக் எடிசன் மாடலில் க்ரோம் பாகங்கள் அனைத்தும் கருப்பு பூச்சுடன் கருஞ்சிறுத்தை போன்று தோற்றமளிக்கிறது. இதில், குயிக் ஷிஃப்டர் வசதியும் கொடுக்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிபி1000ஆர் சூப்பர் பைக் வெளியீடு: இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ஹோண்டா சிபி1000ஆர் சூப்பர் பைக் விரைவில் வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிபி1000ஆர் சூப்பர் பைக் வெளியீடு: இந்திய அறிமுகம் எப்போது?

இந்தியாவில் ரூ.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஹோண்டா சிபி1000ஆர் சூப்பர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் பிங் விங் என்ற பிரத்யேக ஷோரூம்கள் வாயிலாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

Most Read Articles

English summary
Japanese two-wheeler manufacturer, Honda has revealed new CB1000R Super Bike and it is expected to launch in India by sometime next year.
Story first published: Saturday, November 14, 2020, 15:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X