புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியா வருமா?

புதிய வண்ணத் தேர்வுகளில் ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் தாய்லாந்து நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் விபரம் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியா வருமா?

விலை குறைவான ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அருமையான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவற்றுடன் ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியா வருமா?

இந்த நிலையில், சந்தைப் போட்டியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்த்து, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய வண்ணத் தேர்வுகளில் ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியா வருமா?

ஹோண்டா சிபிஆர்650ஆர் மற்றும் சிபிஆர்1000ஆர்ஆர் பைக் மாடல்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியா வருமா?

கருப்பு வண்ணத் தேர்வில் சிவப்பு வண்ண அலங்கார ஸ்டிக்கர், சிவப்பு வண்ணத் தேர்வில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரம். மேட் பிளாக் - ஆரஞ்ச் மற்றும் கருப்பு - சாம்பல் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். சிவப்பு, ஆரஞ்ச் வண்ணத் தேர்வுகளில் சக்கரங்களில் பெயிண்ட் செய்யப்பட்டு இருப்பது அதிக கவர்ச்சியை தருவதாக இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியா வருமா?

தாய்லாந்தில் விற்பனை செய்யப்படும் மாடலில் ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் 149சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 17.1 பிஎச்பி பவரையும், 14.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியா வருமா?

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேடு பைக்கை போன்றே புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக்கும் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது முழுமையான எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியா வருமா?

புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக் யமஹா ஆர்15 வி3 பைக் மாடலுக்கு போட்டியாக இருக்கும். இந்த பைக் உடனடியாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Honda has introduced the 2020 CBR150R with four new colour options in Thailand.
Story first published: Monday, December 7, 2020, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X