புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய பைக் மாடலின் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

நடுத்தர வகை பிரிமீயம் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் சிறந்த தேர்வாக உள்ளது. உலக அளவில் இந்த பைக் மாடலுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த புதிய பைக் மாடல் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

2021 மாடலாக வரும் புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கின் டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு மற்றும் சைடு ஃபேரிங் பேனல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, புதிய சேஸீ அமைப்பும் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த பைக்கின் முன்புறத்தில் ஷோவா நிறுவனத்தின் பிக் பிஸ்டன்கள் கொண்ட 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. முன்சக்கரத்தில் நிஸின் காலிபர்களுடன் கூடிய 310 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் புரோ லிங்க் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது.

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 4 சிலிண்டர்கள் அமைப்புடைய 649சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 63 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட அதிக செயல்திறன் கொண்டதாக இதன் எஞ்சின் வந்துள்ளது.

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த பைக்கில் செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது. தற்போது வழங்கப்பட்டு இருக்கும் புதிய சஸ்பென்ஷன் மற்றும் சேஸீ ஆகியவை சிறப்பான கையாளுமையையும், வளைவுகளில் திரும்பும்போது அதிக நிலைத்தன்மையுடன் ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும்.

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த பைக்கில் புதிய எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், புதிய கருப்பு வண்ணத் தேர்விலும் இந்த பைக் வர இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

கொரோனாவால் இந்த பைக்கின் வெளியீடு தள்ளிப்போனது. இந்த நிலையில், தற்போது உலக அளவில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய பைக் மாடல், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Honda has globally revealed the 2021 CBR650R. This time around the CBR650R gets a more powerful BS6 engine with feature and mechanical updates. However, the company is expected to launch the BS6 CBR650R sometime during the first quarter of 2021 in the Indian market.
Story first published: Wednesday, October 7, 2020, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X