புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவிரி விபரம்!

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் நேற்று இந்தியாவில் வைத்து உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பைக்கின் விலை விபரமும் கூட நேற்று சூசகமாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இந்த பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவிரி குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவிரி விபரம்!

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் நவீன காலத்திற்கு தக்க தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய பழமையான க்ரூஸர் டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் மார்க்கெட்டை குறிவைத்து விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவிரி விபரம்!

இந்த பைக்கிற்கு ரூ.1.90 லட்சத்தை ஒட்டி விலை நிர்ணயிக்கப்படும் என்று ஹோண்டா நேற்றே அறிவித்தது. இந்த சூழலில், இந்த பைக்கிற்கு நேற்று முதல் ஹோண்டா பிக்விங் பிரிமீயம் ஷோரூம்களில் புக்கிங் துவங்கப்பட்டுவிட்டது.

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவிரி விபரம்!

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கை வாங்க விரும்புவோர் ரூ.5,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். புக்கிங் செய்பவர்களுக்கு இந்த மாத மத்தியில் இருந்து டெலிவிரி கொடுக்கப்படும்.

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவிரி விபரம்!

புதிய ஹோண்டா சிபி350 பைக் டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் புரோ ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு இருக்கும் இந்த பைக்கில் அனலாக் மற்றும் டிஜிட்டல் திரையுடன் கூடிய செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவிரி விபரம்!

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை ஸ்மார்ட்ஃபோனுடன் புளூடூத் மூலமாக இணைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. நேவிகேஷன் மற்றும் போன் அழைப்புகளை எளிதாக கட்டுப்படுத்துவதற்கு இது உதவும்.

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவிரி விபரம்!

இந்த பைக்கில் 348சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 20.8 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப்பர் க்ள்ட்ச் வசதியுடன் கூடிய 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் எஞ்சின் மிக மென்மையான ஓட்டுதல் தரத்தை வழங்கும்.

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவிரி விபரம்!

புதிய ஹோண்டா சிபி350 பைக்கில் இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹோண்டா செலக்டபிள் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இரட்டை வண்ணத் தேர்வுகளும் உண்டு.

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவிரி விபரம்!

புதிய ஹோண்டா சிபி350 பைக் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350, ஜாவா 300, பெனெல்லி இம்பீரியல் 400 ஆகிய பைக் மாடல்களுக்கு மிக நேரடி போட்டியாக வர இருக்கிறது. மிகச் சிறப்பான தொழில்நுட்ப அம்சங்கள் இதற்கு கூடுதல் மதிப்பை தரும் என்று கருதலாம்.

Most Read Articles

English summary
புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கு ரூ.1.90 லட்சத்தை ஒட்டி விலை நிர்ணயிக்கப்பட உள்ளது. இந்த சூழலில், இந்த பைக்கிற்கு நேற்று முதல் ஹோண்டா பிக்விங் பிரிமீயம் ஷோரூம்களில் புக்கிங் துவங்கப்பட்டுவிட்டது. இந்த பைக்கை வாங்க விரும்புவோர் ரூ.5,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். புக்கிங் செய்பவர்களுக்கு இந்த மாத மத்தியில் இருந்து டெலிவிரி கொடுக்கப்படும்.
Story first published: Thursday, October 1, 2020, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X