Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 8 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அசத்தலான ஹோண்டாவின் புத்தம் புதிய 350சிசி பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு புது நெருக்கடி
ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய 350சிசி க்ரூஸர் பைக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் மாடலுக்கு நேரடி போட்டியாக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடலின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 என்ற பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பழமமையும், நவீனமும் கலந்த வடிவமைப்புக் கொள்கையில் இந்த பைக் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் விரும்பிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

ரெட்ரோ க்ரூஸர் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த பைக் தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணம் என இரண்டிற்கும் ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

வட்ட வடிவிலான ஹெட்லைட், ரியர் வியூ மிரர்கள், இண்டிகேட்டர்கள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ரோம் பாகங்கள் ஆகியவை ரெட்ரோ க்ரூஸர் பைக் மாடலாக இதனை பரைசாற்றுகிறது.

இந்த பைக் மாடலானது டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் புரோ என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புரோ வேரியண்ட்டில் டியூவல் டோன் என்ற இரட்டை வண்ணக் கலவை கொடுக்கப்பட்டு இருக்கும்.

இந்த பைக்கில் ஹோண்டாவின் ஸ்மார்ட்ஃபோன் வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டமும் இடம்பெற இருக்கிறது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டியூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இந்த பைக்கில் ட்யூப்லெஸ் டயர்கள், அலாய் வீல்கள், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய ஹோண்டா பைக்கில் 348.36சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.8 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் மாடலானது ரூ.1.90 லட்சத்தை ஒட்டிய எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.. ஹோண்டாவின் பிக்விங் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும். ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் மார்க்கெட்டை குறிவைத்து இந்த பைக் களமிறக்கப்பட உள்ளது. இந்த பைக் பெனெல்லி இம்பீரியல் 400 மாடலுக்கும் போட்டியாக வர இருக்கிறது.