கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் பிரிமீயம் வகை க்ரூஸர் பைக் மார்க்கெட்டில் கவாஸாகி வல்கன் எஸ் பைக் .சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வல்கன் எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் டிசைனில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், புதிய இரட்டை வண்ணக் கலவையில் வந்துள்ளது. விசேஷ கருப்பு வண்ணம் மற்றும் சிவப்பு அலங்கார ஸ்டிக்கர்களுடன் இந்த புதிய வண்ணத் தேர்வு மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அதேநேரத்தில், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பும், புளூடூத் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கோள வடிவிலான ஹெட்லைட் அமைப்பு, கச்சிதமான ஃபென்டர் அமைப்பு, தாழ்வான இருக்கை அமைப்புடன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சைலென்சர் எஞ்சினுக்கு கீழாக கொடுக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி வல்கன் எஸ் க்ரூஸர் பைக்கில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 649 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 60 பிஎச்பி பவரையும், 62 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக் 1575 மிமீ வீல் பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், முன்சக்கரத்தில் இரண்டு 300 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 250 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்கில் 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க், உயர்த்தப்பட்ட அமைப்புடைய ஹேண்டில்பார், சொகுசான இருக்கை அமைப்பு, நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ப முன்னோக்கி அமைக்கப்பட்ட ஃபுட் ரெஸ்ட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடலுக்கு ரூ.5.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki has launched the 2021 Vulcan S BS6 motorcycle in India. The 2021 Vulcan S retail at Rs 5.79 lakh, ex-showroom (Delhi). This makes it Rs 30,000 more expensive than its BS4 counterpart in the Indian market.
Story first published: Friday, August 28, 2020, 18:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X