Just In
- 2 min ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
- 1 hr ago
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- 2 hrs ago
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- 3 hrs ago
நிஜ பாகுபலியா? வறுமையின் அடையாளமா? தலையில் பைக்கை சுமந்தபடி பஸ்ஸின் மீது ஏறிய தொழிலாளி... வீடியோ
Don't Miss!
- Movies
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- News
டெல்லி டிராக்டர் பேரணி, தமிழக விவசாயிகள் பேரணி, ஒன்று கூடல்களுக்கு திமுக முழு ஆதரவு: ஸ்டாலின்
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் விற்பனைக்கு அறிமுகம்
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள், விலை விபரத்தை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய பைக் சந்தையில் கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் வரிசை பைக் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. துள்ளலான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் சிறந்து விளங்குவதுடன் மிக சவாலான விலையில் இந்த பைக் மாடல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், கேடிஎம் ட்யூக் வரிசை மாடல்களுக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்தியாவில் கேடிஎம் ட்யூக் வரிசையில் மிக குறைவான சிசி திறன் கொண்ட மாடலாக 125 ட்யூக் விற்பனையில் உள்ளது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாக இந்த பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் பைக்கின் டிசைன் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் புதிய மாற்றங்களுடன் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் மாற்றங்களை சந்தித்துள்ளது.

கூர்மையான பாகங்களுடன் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சப்-ப்ரேம் அமைப்பு அதிகம் வெளியில் தெரியும்படியாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று, பெரிய ஸ்டீல் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், இருக்கை, ஹேண்டில்பார், பெட்ரோல் டேங்க், ஃபுட்பெக்குகள் சிறப்பான ரைடிங் பொசிஷனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 13.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்படடு இருப்பதும் முக்கிய மாற்றமாக குறிப்பிடப்படலாம். இந்த புதிய பெட்ரோல் டேங்க் ஓட்டுனரின் தொடைகளுக்கு அதிக பிடிப்பை வழங்கும் வகையில் அமையும்.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் மாடலின் சஸ்பென்ஷனும் முக்கிய மாற்றத்தை சந்தித்துள்ளது. புதிய டபிள்யூபி ஃபோர்க்குகள் மற்றும் ஷாக் அப்சார்பர் முன்புறத்திலும், பின்புறத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், சிறப்பான நிலைத்தன்மையுடன், சொகுசான பயண அனுபவத்தை ஓட்டுபவர் பெற முடியும்.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 125சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது இந்த எஞ்சின் சிறப்பான செயல்திறனையும், மேம்பட்ட ஓட்டுதல் உணர்வையும் வழங்கும் என்று கேடிஎம் தெரிவிக்கிறது.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் ரூ.1,50,010 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட ரூ.8,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.
எலெக்ட்ரானிக் ஆரஞ்ச் மற்றும் செராமிக் ஒயிட் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.