ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின் பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிப்பு...!

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் இண்டர்செப்டர் & கான்டினென்டல் 650 பிஎஸ்6 பைக்குகள் இந்தியா முழுவதும் உள்ள ராயல் எண்ட்பீல்டு டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த புதிய பிஎஸ்6 பைக்குகளின் அறிமுகத்தை மிக விரைவில் சந்தையில் எதிர்பார்க்கலாம்.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின் பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிப்பு...!

மேலும் இந்த ராயல் எண்ட்பீல்டு பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பார்க்குபோது இண்டர்செப்டர் & கான்டினென்டல் 650 பைக்குகள் பிஎஸ்4 வெர்சனில் இருந்து சிறிது விலை அதிகரிப்பை பெற்றுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின் பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிப்பு...!

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் தனித்துவமான பைக் மாடல்களாக விளங்கும் இவற்றில் இண்டர்செப்டர் 650 பிஎஸ்6 பைக்கின் விலை தற்போதைய மாடலை விட ரூ.8,000-மும், கான்டினென்டல் 650 பிஎஸ்6-ன் விலை ரூ.9,000-மும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின் பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிப்பு...!

பொதுவாக பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படும் பைக்கில் ப்ரீ-கேட்டலிடிக் கன்வெர்டர், எக்ஸாஸ்ட் பைப்பில் பொருத்தப்படும். ஆனால் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் இந்த இரு பிஎஸ்6 பைக்கிலும் எக்ஸாஸ்ட் அமைப்பின் உட்புறத்தில் ப்ரீ-கேட்-ஐ ஒருங்கிணைத்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் இந்த புதிய பிஎஸ்6 பைக்குகளின் தோற்றம் பிஎஸ்4 வெர்சனில் இருந்து எந்த விதத்திலும் வித்தியாசமாக தெரியாது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின் பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிப்பு...!

இந்த இரு பைக்குகளின் இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டதை தவிர்த்து மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

இண்டர்செப்டர் 650 & கான்டினென்டல் 650 பைக்குகளில் ஒரே 649சிசி ஏர் மற்றும் ஆயில்-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-ல் 47 பிஎச்பி பவரையும், 5,250 ஆர்பிஎம்-ல் 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின் பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிப்பு...!

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் வழங்கப்படுகிறது. என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டாலும் தற்போதைய ஆற்றலை அளவை தான் பைக்கிற்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின் பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிப்பு...!

சஸ்பென்ஷனிற்கு முன் சக்கரத்தில் 41மிமீ ஃபோர்க்ஸும், பின் சக்கரத்தில் இரட்டை-எரிவாயு மூலமாக செயல்படக்கூடிய ஷாக்ஸும் வழங்கப்படுகிறது. இவை பைக் மற்றும் பயணிகளின் எடைக்கு ஏற்றாற்போல் செயல்படும் வகையில் 5-நிலை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியை பெற்றுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின் பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிப்பு...!

டிஸ்க் ப்ரேக் ஆனது முன்புறத்தில் 320மிமீ அளவிலும், பின்புறத்தில் 240மிமீ அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு 650சிசி பைக்குகளும் 18-இன்ச் ஸ்போக்டு சக்கரங்களை கொண்டுள்ளன. இந்த சக்கரங்களில் பைரெல்லி பாண்டோம் ஸ்போர்ட்காம்ப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இண்டர்செப்டர் 650 பைக் மிகவும் சவுகரியமான ரைடிங் பொசிஷனை கொண்டுள்ளதால் தொலைத்தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். கான்டினென்டல் 650, நீண்ட பெட்ரோல் டேங்க் மற்றும் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்களுடன் ரேசிங் பிரியர்களுக்கு ஏற்ற வாகனமாக உள்ளது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின் பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிப்பு...!

ரூ.3.5 லட்சத்தை விட குறைவான எக்ஸ்ஷோரூம் விலையை கொண்டுள்ள இந்த பைக்குகளில் 650சிசி-ல் இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படுவதால், ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் 650 மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் மிகவும் கவனிக்கத்தக்க பைக்குகளாக உள்ளன. இதனால் இந்த சிறிய விலை உயர்வு இவற்றின் விற்பனையை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பில்லை.

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor & Continental 650 BS6 Prices Revealed: Motorcycle Arrive At Dealerships
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X