ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் ஆரம்பமானது..!

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இவற்றின் விலை பிஎஸ்4 வெர்சன் பைக்குகளை விட ரூ.10,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் ஆரம்பமானது..!

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் அதிக சக்தி வாய்ந்த இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 என்ற 650 ட்வின்ஸ் பைக்குகளை முதன்முதலாக 2018 நவம்பரில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இவற்றின் ஆரம்ப விலை அறிமுகத்தின்போது ரூ.2.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் ஆரம்பமானது..!

விலை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால், அறிமுகமான சில மாதங்களில் சந்தையில் பிரபல 650சிசி பைக்குகளாக இவை மாறின. இந்நிலையில் தான் இந்த ஜனவரி மாத துவக்கத்தில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் இந்த 650 ட்வின்ஸ் பைக்குகளை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் ஆரம்பமானது..!

பிஎஸ்6 அப்டேட்டால் இவற்றின் விலையில் ரூ.10,000 அதிகரிப்பட்டு தற்போது இவை இரண்டும் முறையே ரூ.2.65 லட்சம் மற்றும் ரூ.2.80 லட்சத்தை ஆரம்ப விலையாக பெற்றுள்ளன. இதில் அதிகப்பட்சமாக கான்டினென்டல் ஜிடி650 பிஎஸ்6 பைக்கின் டாப் வேரியண்ட்டான க்ரோம் ரூ.3.01 லட்சத்தில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் ஆரம்பமானது..!

இந்த இரு பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே டீலர்ஷிப்களில் ரூ.10,000 தொகையில் நடைப்பெற்று வருகின்றன. இதற்கிடையில் தற்போது முன்பதிவு செய்த சிலருக்கு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் ஆரம்பமானது..!

இந்த இரு ட்வின் பைக்குகளிலும் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட 649சிசி ஏர்/ஆயில்-கூல்டு, இணையான-இரட்டை என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 42 பிஎச்பி பவரையும் 52 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்குகிறது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் ஆரம்பமானது..!

ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜினின் பிஎஸ்6 அப்டேட் தவிர்த்து இந்த புதிய பிஎஸ்6 பைக்குகளின் டிசைன் அல்லது தொழிற்நுட்பம் உள்ளவற்றில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் ஆரம்பமானது..!

அதிகப்பட்சமாக மேலே கூறப்பட்டுள்ள என்ஜினின் வெளியிடு ஆற்றல் அளவுகளில் வேண்டுமானால் சிறிது மாற்றத்தை எதிர்பார்க்கலாம். அதேபோல் எரிபொருள் திறன் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்பிலும் இந்த பிஎஸ்6 பைக்குகள் அப்டேட்களை பெற்றிருக்கலாம்.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் ஆரம்பமானது..!

650 ட்வின்ஸ் பைக்குகளில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் நேர்த்தியான ஹெட்லேம்ப் மற்றும் முன்புற ஃபோர்க்குகளில் பிரதிப்பலிப்பான்களை அப்டேட்டாக வழங்கியிருந்தது.

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் ஆரம்பமானது..!

அதன்பிறகு 650 ட்வின்ஸ் அறிமுக மாடல் பைக்குகளின் மீது குறிப்பிட்ட சில நகரத்து வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததை அடுத்து அத்தகைய பாகங்கள் அயர்ன்-அவுட்டில் அப்டேட் செய்யப்பட்டன. ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் பைக்குகள் இரண்டும் ஸ்டாண்டர்ட், கஸ்டம் மற்றும் க்ரோம் என்ற மூன்று வேரியண்ட்களை பெற்றுள்ளன.

Image Courtesy: Iamabiker/Instagram

ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரிகள் ஆரம்பமானது..!

மேலும் இந்த 650சிசி பைக்குகளை கஸ்டமைஸ்ட் செய்வது மிக எளிது என்பதால், அடுத்த சில மாதங்களுக்கு எத்தனை 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகள் புதிய வடிவில் சாலையில் சீறிப்பாய உள்ளன என்பதை மட்டும் பாருங்கள்.

Most Read Articles

English summary
Royal Enfield 650 Twins BS6 deliveries have commenced in full swing. Prices are up by about Rs 10,000 compared to the outgoing BS4 models.
Story first published: Friday, January 31, 2020, 17:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X