Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 8 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்- அடுத்த ஆண்டு இந்த தோற்றத்தில்தான் விற்பனைக்கு வரும்...
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்கின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றின் மூலம் தெரியவந்துள்ள இந்த ராயல் என்பீல்டு பைக்கை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னையில் தொழிற்சாலைகளை அமைத்து செயல்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனம் சர்வதேச சந்தைகளில் 2018ஆம் ஆண்டின் இறுதியில் இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 என்ற இரு 650சிசி பைக்குகளை அறிமுகம் செய்தது.

இந்தியாவில் இவற்றின் விற்பனை பெரிய அளவில் இல்லை என்றாலும், பெரிய என்ஜின் பைக்குகளை விரும்பும் மற்ற நாடுகளில் இந்த இரு 650சிசி பைக்குகளும் நல்லப்படியாகவே விற்பனையாகி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், இவை இரண்டின் மூலமாகதான் சில நாடுகளில் ராயல் என்பீல்டு கவனிக்கத்தக்க மோட்டார்சைக்கிள் பிராண்டாக உருவெடுத்துள்ளது.

இதனால் தான் 650 ரேஞ்ச் பைக்குகளின் சந்தையை விரிவுப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் புதிய 650சிசி மோட்டார்சைக்கிள் கிளாசிக் டிசைன் பாகங்களுடன் மாடர்ன் க்ரூஸர் பைக்காக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்பீல்டு 650 க்ரூஸர் பைக்கின் மாதிரி படங்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது சாலை சோதனையின் போது இந்த பைக்கின் ஸ்பை படங்கள் காடிவாடி செய்திதளம் மூலமாக வெளியாகியுள்ளன. இந்த படங்களில் பைக் எந்தவொரு மறைப்புமின்றி இருப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.

2018ல் இத்தாலியில் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் கேஎக்ஸ்-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த க்ரூஸர் பைக்கிற்கு கேஎக்ஸ்650 என பெயர் வைக்கப்படலாம். முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபார்க்குகளை பெற்றுவரவுள்ள முதல் ராயல் என்பீல்டு பைக்காக இந்த 650சிசி பைக் விளங்கவுள்ளது.

ஆனால் இந்த ஃபோர்க்குகளுக்கு ஏற்றப்படி கதிரியக்கமாக பொருத்தப்பட்ட ப்ரேக் காலிபர்கள் இந்த பைக்கில் இல்லாமல் இருப்பது நமக்கு குழப்பதை ஏற்படுத்துகிறது. பின் மற்றும் பின்புறத்தில் முறையே 17 மற்றும் 19 இன்ச்சில் கருப்பு நிற அலாய் சக்கரங்களை கொண்டுள்ள இந்த பைக்கில் பின்பக்க ஃபெண்டர் முன்பக்கத்தில் இருப்பதை காட்டிலும் மிகவும் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை பைக் கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் இருந்தாலும், ராயல் என்பீல்டு கேஎக்ஸ்650 பைக்கின் அறிமுகம் எப்படியிருந்தாலும், தண்டர்பேர்டுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் மீட்டியோர் 350 மற்றும் அடுத்த தலைமுறை கிளாசிக் 350 பைக்குகளுக்கு பிறகே இருக்கும்.

இதனால் அடுத்த ஆண்டு மத்தியிலோ அல்லது இறுதி பண்டிகை காலத்திலோ இந்த ராயல் என்பீல்டு பைக் அறிமுகமாகலாம். புதிய கேஎக்ஸ்650 பைக் சர்வதேச சந்தையில் கவாஸாகியின் வுல்கான் எஸ் பைக்கிற்கு போட்டியாக கருதப்படுகிறது. ஆனால் அதனை விட இந்த ராயல் என்பீல்டு பைக் மலிவானதாகவே விற்பனைக்கு வரும். ரூ.3.50 லட்சம் அளவில் இதன் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படலாம்.