புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் எப்போது அறிமுகம்?

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் அறிமுக விபம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் எப்போது அறிமுகம்?

நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிக வலுவான வர்த்தகத்தை பதிவு செய்து வருகிறது. ஜாவா, பெனெல்லி நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள சந்தைப் போட்டியை மனதில் வைத்து புதிய மாடல்களை களமிறக்குவதில் ராயல் என்ஃபீல்டு தீவிரம் காட்டி வருகிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் எப்போது அறிமுகம்?

அந்த வகையில், தனது தண்டர்பேர்டு 350 பைக் மாடலை புதிய தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த புதிய மாடல் மீட்டியோர் 350 என்ற பெயரில் வர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் எப்போது அறிமுகம்?

கடந்த பல மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு நடைமுறைக்கு வந்தவுடன் இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த பைக்கின் அறிமுகம் சற்றே தள்ளிப் போய் உள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் எப்போது அறிமுகம்?

இந்த நிலையில், புதிய மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம் குறித்து கார் அண்ட் பைக் தளத்திடம் பேசிய ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரி வினோத் தாசரி,"இது புதிய 350சிசி பைக் மாடலாக அறிமுகப்படுத்த உள்ளோம். ஓட்டுதல் தரம் என அனைத்திலும் இது சிறந்த அனுபவத்தை தரும். வரும் ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்திவிடுவோம் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் எப்போது அறிமுகம்?

அதாவது, கொரோனா ஊரடங்கு விதிகள் மேலும் தளர்த்தப்பட்டு, சுமூகமான சூழல் உருவாகும்போது இந்த நிச்சயம் ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வந்துவிட முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறி இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் எப்போது அறிமுகம்?

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் புத்தம் புதிய கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்ப்டடு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த புதிய J1D பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டு இருக்கும் இந்த பைக் டபுள் கிரேடில் சேஸீ மற்றும் புதிய 350 சிசி எஞ்சினை பொருத்துவதற்கான அம்சங்களுடன் வர இருக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் எப்போது அறிமுகம்?

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 2.0 என்ற புதிய வர்த்தக கொள்கையின் கீழ் பல புதிய பைக் மாடல்கள் வற இருக்கின்றன. அதில் முதல் மாடலாக மீட்டியோர் 350 பைக் வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆலையிலேயே கஸ்டமைஸ் செய்து வாங்கும் வாய்ப்பையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வழங்க இருக்கிறது. இதில், வாடிக்கையாளரின் பெயரையும் பொறித்து பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

மேலும், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத் இணைப்பு வசதி மற்றும் நேவிகேஷன் வசதிகளையும் இந்த பைக்கில் வழங்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த பைக் மீது வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆட்டோமொபிலி இன்ஃபினிட்டி தளம் வெளியிட்டுள்ள படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
According to report, Royal Enfield is planning to launch Meteor 350 motorcycle by the end of June 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X