ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

ராயல் என்பீல்டின் புத்தம் புதிய மீட்டியோர் 350 பைக் இந்திய சந்தையில் இன்று (நவம்பர் 6) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்க்கு மத்தியில் அறிமுகமாகியுள்ள இந்த ராயல் என்பீல்டு பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

ராயல் என்பீல்டு பைக் பிரியர்கள் மிக நீண்ட மாதங்களாக காத்திருந்ததற்கு ஒரு முடிவாக தற்போது மீட்டியோர் 350 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பைக் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி நமது ஆர்வத்தை தூண்டியிருந்தன.

ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

விற்பனையில் இருந்த தண்டர்பேர்டு 350 பைக்கிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள மீட்டியோரை மேட் ப்ளாக், ஃபயர்பால் மஞ்சள், ஃபயர்பால் சிவப்பு, ஸ்டெல்லர் சிவப்பு மெட்டாலிக், ஸ்டெல்லர் ப்ளூ மெட்டாலிக், சூப்பர்நோவா ப்ரவுன் மற்றும் சூப்பர்நோவா நீலம் என்ற நிறத்தேர்வுகளில் ஏதேனும் ஒரு வண்ணத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

இந்த நிறங்களின் பெயர்களில் உள்ள ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என்பது மீட்டியோர் 350 பைக்கின் வேரியண்ட்களை குறிக்கிறது. அதாவது இந்த மூன்று வேரியண்ட்களில் தான் இந்த பைக் இனி விற்பனை செய்யப்படவுள்ளது. இவற்றில் ரூ.1.75 லட்சத்தை விலையாக பெற்றுள்ள ஃபயர்பால் வேரியண்ட்டில் என்ஜின் மற்றும் ரிம்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்படும்.

ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

அதுவே ஸ்டெல்லரை க்ரோம்-ப்ளேடட் ஹேண்டில்பார் & எக்ஸாஸ்ட் மற்றும் பின் இருக்கை பயணிக்கு முதுகு தலையணை உள்ளிட்டவற்றுடன் ரூ.1.81 லட்சத்தில் வாங்கலாம். சூப்பர்நோவா, ப்ரீமியம் தரத்திலான வேரியண்ட்டாகும். ரூ.1.90 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையுடன் மெஷின்-அட் அலாய் சக்கரங்கள், பெரிய விண்ட்ஸ்க்ரீன் மற்றும் ப்ரீமியம் தரத்தில் இருக்கை அமைப்பை பெற்றுள்ள இந்த வேரியண்ட் நீல நிறத்தில் சமீபத்தில் ஷோரூம் ஒன்றில் காட்சியளித்திருந்தது.

ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

தண்டர்பேர்டு 350 பைக்கிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளதால் பைக்கின் தோற்றம் மொத்தமும் தண்டர்பேர்டு பைக் மாடலை தான் நினைவுப்படுத்துகிறது. ராயல் என்பீல்டு பைக்குகளுக்கே உண்டான ரெட்ரோ டிசைன் இந்த பைக்கிலும் தொடர்ந்துள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்பை பெற்றுள்ள மீட்டியோர் 350 பைக்கின் பெட்ரோல் டேங்க் கண்ணீர்த்துளி வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இருக்கை நன்கு அகலமாகவும், எக்ஸாஸ்ட் குழாய் நீண்டதாகவும் உள்ளன. பெட்ரோல் டேங்கில் பொருத்தப்பட்டுள்ள "Royal Enfield" லோகோவும் புதியதாக காட்சியளிக்கிறது.

ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

முன் சக்கரத்திற்கு மிக அருகில் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி, சற்று நீளமான ஹேண்டில்பார்கள் மற்றும் தாழ்வான இருக்கையினால் இந்த பைக்கை எந்தவொரு சிரமமும் இன்றி இயக்கி செல்லலாம். மேலும் இந்த பண்பினால் மீட்டியோர் 350 பைக் தொலைத்தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது எங்களது கருத்து.

ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

பழமையான பைக்குகளின் தோற்றத்தில் இந்த புதிய பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றாற்போல் பின்புறம் பார்க்கும் கண்ணாடிகள் வட்ட வடிவில் வழங்கப்பட்டுள்ளன. 19 இன்ச்சில் முன்புறத்தில் உள்ள சக்கரத்தில் 100/90 டயரும், 17 இன்ச்சில் உள்ள பின் சக்கரத்தில் 140/70 என்ற தோற்ற வடிவத்தை கொண்ட டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

ப்ரேக்கிங் பணியினை கவனிக்க இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் 300மிமீ மற்றும் 270மிமீ என்ற அளவில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ட்யுல்-சேனல் ஏபிஎஸ்-ம் நிலையாக உள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆனது இரட்டை-பேடில் செமி-டிஜிட்டல் தரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்ட இதன் மூலம் ஒவ்வொரு திருப்பலுக்கும் நாவிகேஷனை பெற முடியும். மீட்டியோர் 350 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 349சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!! பைக்கின் சிறப்பம்சங்கள் இவைதான்

முன்பு புஷ்-ராட் கட்டமைப்பில் வழங்கப்பட்ட இந்த என்ஜின் இந்த புதிய பைக்கில் ஒஎச்சி டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பைக்கிற்கு என்ஜின் ஆற்றல் வழங்கல் கூடுதல் மென்மையானதாக இருக்கும். இருப்பினும் எக்ஸாஸ்ட் சத்தம் மிகவும் முடப்பட்டிருப்பது சில வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம்.

Most Read Articles

English summary
Royal Enfield Meteor 350 launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X