மீட்டியோர் 350 பைக் மீதான ஆர்வத்தை தூண்டும் ராயல் என்பீல்டு!! நவம்பர் 6ல் அறிமுகம்

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ ஒன்று மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீட்டியோர் 350 பைக் மீதான ஆர்வத்தை தூண்டும் ராயல் என்பீல்டு!! நவம்பர் 6ல் அறிமுகம்

ராயல் என்பீல்டு பிரியர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீட்டியோர் 350 பைக் நவம்பர் 6ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்கிற்கு மாற்றாக வெளிவரும் இந்த 350சிசி பைக்கின் டீசர் வீடியோ கடந்த சில மாதங்களாக வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த பைக்கின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பைக்கின் அறிமுகத்திற்கான நிகழ்ச்சிக்கு இருக்கும் மணிநேரங்களை தயாரிப்பு நிறுவனம் கணக்கிட்டு வருவதுபோல் காட்டப்பட்டுள்ளது.

மீட்டியோர் 350 பைக் மீதான ஆர்வத்தை தூண்டும் ராயல் என்பீல்டு!! நவம்பர் 6ல் அறிமுகம்

இதில் சிறு சிறு காட்சிகளாக காட்டப்பட்டுள்ள மீட்டியோர் 350 பைக்கின் எக்ஸாஸ்ட் குழாயை தெளிவாக பார்க்க முடிகிறது. முற்றிலும் புதிய ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ராயல் என்பீல்டு பைக்கில் அமரும் பொசிஷன் நேராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீட்டியோர் 350 பைக் மீதான ஆர்வத்தை தூண்டும் ராயல் என்பீல்டு!! நவம்பர் 6ல் அறிமுகம்

ஹேண்டில்பார்கள் சற்று உயரமாகவும், இருக்கை சற்று தாழ்வாகவும் வழங்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் சேர்ந்து ரைடருக்கு சவுகரியமான பயணத்தை வழங்கும் என்பது உறுதி. எல்இடி டிஆர்எல் உடன் ஹாலோஜன் ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்படும் சிறப்பம்சங்களாகும்.

மீட்டியோர் 350 பைக் மீதான ஆர்வத்தை தூண்டும் ராயல் என்பீல்டு!! நவம்பர் 6ல் அறிமுகம்

ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் 2020 மீட்டியோர் 350 பைக்கில் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

Most Read Articles
English summary
Royal Enfield Meteor Teased In Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X