அடுத்த மாதம் 250சிசி மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது விலை குறைவான புதிய பைக் மாடலை மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்த மாதம் 250சிசி மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

நடுத்தர வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முன்னிலை வகிப்பதுடன், போட்டியாளர்களைவிட மிக வலுவான சந்தையை பெற்றிருக்கிறது. இந்தநிலையில், ஜாவா, பெனெல்லி, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ராயல் என்ஃபீல்டு சந்தையை கட்டம் கட்டியதால், தனது சந்தை பங்களிப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும், விற்பனையை அதிகரிப்பதற்கும் தீவிர திட்டங்களை கையில் எடுத்துள்ளது.

அடுத்த மாதம் 250சிசி மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

இதன்படி, விலை குறைவான இரண்டு புதிய பைக் மாடல்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி வருவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த மோட்டார்சைக்கிள்கள் J1C மற்றும் J1D ஆகிய குறியீட்டுப் பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

அடுத்த மாதம் 250சிசி மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

இந்த இரண்டு பைக் மாடல்களிலும் 250சிசி எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த பைக்குகள் மீதான ஆர்வம் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறி உள்ளது.

அடுத்த மாதம் 250சிசி மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

இந்த சூழலில், ராயல் என்ஃபீல்டு J1D மோட்டார்சைக்கிள் மாடலானது அடுத்த மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோ என்டிடிவி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் 250சிசி மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

இந்த புதிய பைக் மாடல் 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஹிமாலயன் அல்லது தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளாக இருக்கக்கூடும் என்ற தகவலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

அடுத்த மாதம் 250சிசி மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

அதேநேரத்தில், ஹன்ட்டர், ஷெர்பா, ஃப்ளையிங் ஃப்ளீ மற்றும் ரோட்ஸ்டெர் ஆகிய நான்கு புதிய பெயர்களை ராயல் என்ஃபீல்டு பதிவு செய்துள்ளது. எனவே, இவை புத்தம் புதிய மாடல்களாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அடுத்த மாதம் 250சிசி மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கு பக்கபலமாக விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கும் விதத்தில் புதிய மாடலை கொண்டு வருவதற்கு ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.

அடுத்த மாதம் 250சிசி மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

அதாவது, ரூ.1.50 லட்சம் விலையில் புதிய மாடலை நிலைநிறுத்துவதற்கான திட்டமும் உள்ளதாக தெரிகிறது. இதன்மூலமாக, பஜாஜ் டோமினார் 250 உள்ளிட்ட பல மாடல்களை எதிர்கொள்ளவும், இந்த சந்தையில் உள்ள வர்த்தக வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு வழி பிறக்கும்.

Source: Auto NDTV

Most Read Articles
English summary
According to report, Royal Enfield is planning to launch a new motorcycle by the end of April 2020.
Story first published: Thursday, March 12, 2020, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X