வேறொரு ப்ராண்ட்டின் பெயரில் சீனாவில் அறிமுகமானது சுசுகியின் 300சிசி பைக்...

சீனாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டான ஹாஜூ மோட்டார்சைக்கிள்ஸ் தான் சுசுகி பைக்குகளை சீனாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஹாஜூ நிறுவனம் ஹாஜூ டிஆர்300 பைக் மாடலை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 300சிசி பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

வேறொரு ப்ராண்ட்டின் பெயரில் சீனாவில் அறிமுகமானது சுசுகியின் 300சிசி பைக்...

சீனாவில் இந்த பைக் ஹாஜூ டிஆர்300 என்ற பெயரில் அறிமுகமானாலும், மற்ற நாட்டு சந்தைகளில் சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 என்ற பெயரில் தான் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இதன் விலை சீன சந்தையில் 33,080 யுவான் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேறொரு ப்ராண்ட்டின் பெயரில் சீனாவில் அறிமுகமானது சுசுகியின் 300சிசி பைக்...

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.3.55 லட்சமாகும். இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 300சிசி இணையான-இரட்டை லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-ல் 29.2 பிஎச்பி பவரையும், 6500 ஆர்பிஎம்-ல் 27.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

வேறொரு ப்ராண்ட்டின் பெயரில் சீனாவில் அறிமுகமானது சுசுகியின் 300சிசி பைக்...

என்ஜினின் இந்த வெளிப்படுத்தும் ஆற்றலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பைக்கின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. ஏனெனில் இந்த என்ஜின் வெளிப்படுத்தும் 30 பிஎச்பி பவரில் இயங்கக்கூடிய பெண்டா க்ரூஸர் பைக்கின் விலை சீன சந்தையில் 19,980 யுவான் (ரூ.2.14 லட்சம்) ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேறொரு ப்ராண்ட்டின் பெயரில் சீனாவில் அறிமுகமானது சுசுகியின் 300சிசி பைக்...

ஹாஜூ டிஆர்300 பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் கேஒய்பி-ன் தலைக்கீழான ஃபோர்க்கும், பின்புறத்தில் 7-நிலை ப்ரீலோட் அட்ஜெஸ்ட்மெண்ட் உடன் இணைக்கப்பட்ட மோனோஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

வேறொரு ப்ராண்ட்டின் பெயரில் சீனாவில் அறிமுகமானது சுசுகியின் 300சிசி பைக்...

ப்ரேக் பணிக்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக், ட்யூல்-சேனல் ஆண்டி-ப்ரேக் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்களில் க்ரிப்பி பைரெல்லி டியாப்லோ ரோஸ்ஸோ III டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன,

வேறொரு ப்ராண்ட்டின் பெயரில் சீனாவில் அறிமுகமானது சுசுகியின் 300சிசி பைக்...

ஹாஜூ டிஆர்300 என்ற பெயரில் வரும் இந்த சுசுகி பைக்கில் கவனிக்கத்தக்க அம்சங்களாக முழு-எல்இடி லைட்டிங் சிஸ்டம் மற்றும் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் உடன் உள்ளன. சுசுகி நிறுவனம் இந்த பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் குறைவே.

வேறொரு ப்ராண்ட்டின் பெயரில் சீனாவில் அறிமுகமானது சுசுகியின் 300சிசி பைக்...

ஏனெனில் இந்திய சந்தைக்காக தயாரிக்கப்பட்டு ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப்250 பைக் மாடல்களை சுசுகி நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இவை இரண்டின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.63 லட்சம் மற்றும் ரூ.1.75 லட்சமாக உள்ளது.

Most Read Articles

English summary
Haojue DR300 (Suzuki GSX-S300) Has Finally Been Launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X