அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...

விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களுள் பிரபலமான ட்ரையம்ப் இந்தியா நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக் மாடலின் அப்டேட் வெர்சன் அடுத்த மார்ச் மாதத்தில் சந்தைக்கு வரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...

மிடில்-வெயிட் ஸ்போர்ட்ஸ் மாடலான இந்த புதிய பைக்கில் திருத்தியமைக்கப்பட்ட டிசைன் பாகங்கள், அப்கிரேட் தொழிற்நுட்பங்கள் மற்றும் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான மிட்-ரேஞ்ச் என்ஜின் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...

ராக்கேட் 3 பைக் மாடலுக்கு பிறகு பிஎஸ்6 என்ஜினுடன் இந்தியாவில் அறிமுகமாகும் இரண்டாவது ட்ரையம்ப் பைக் மாடலாக விளங்கவுள்ள புதிய ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடல் அதன் முந்தைய மாடலை விட 400 யூரோ (ரூ.37,000) அதிகமாக இங்கிலாந்தில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...

இதே அளவிலான விலை உயர்வை தான் இதன் இந்திய விற்பனை பைக் மாடலும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடல் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.11.13 லட்சத்தை விலையாக கொண்டுள்ளது.

அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...

இந்த புதிய பிஎஸ்6 பைக் தற்போதைய ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடலை விட முரட்டுத்தனமாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக ட்ரையம்ப் நிறுவனம் கவனமாக தயாரிப்பு பணிகளை மேற்கொண்டிருப்பது இதன் புகைப்படங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது.

அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...

புதிய ட்வின் எல்இடி ஹெட்லேப்பை பெற்றுள்ள இந்த 2020 ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக் ஒருங்கிணைந்த டிஆர்எல்களையும் கொண்டுள்ளது. ஹெட்லேம்ப் பகுதி மட்டுமில்லாமல் ட்ரையம்ப் நிறுவனம் பைக்கின் பாடி பேனல்கள், ஃப்ளைஸ்க்ரீன், பக்கவாட்டு பேனல்கள், பின்புற பகுதி, இருக்கையை மூடியுள்ள லெதர் மற்றும் பெல்லி பேன் போன்றவற்றிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...

இதனால் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக்கின் இந்த புதிய வெர்சன் மிகவும் ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த பிஎஸ்6 பைக்கின் மூலம் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் புதிய கிராஃபிக்ஸையும் இந்நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...

இந்த புதிய வசதி ப்ளூடூத் மற்றும் கோப்ரோ கண்ட்ரோல்களை ஆக்ஸசரீஸ்கள் மூலமாக ஓட்டுனருக்கு வழங்கவுள்ளது. சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள புதிய ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடலில் 765சிசி, இன்லைன்-ட்ரிபிள் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.

அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...

ட்ரையம்ப்பின் மோட்டோ 2 என்ஜின் மேம்படுத்துதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த என்ஜினை வழக்கமான குழு தான் தயாரித்துள்ளது. இந்த பிஎஸ்6 அப்டேட்டால் கார்பன்-பைபர் முனையை கொண்ட புதிய, எளிதாக புகையை வெளியேற்றக்கூடிய எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை பைக் பெற்றுள்ளது.

அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...

இருப்பினும் இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 123 பிஎச்பி ஆற்றல் அளவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் டார்க் திறன் 77 என்எம்-ல் இருந்து 79 என்எம் வரையில் அதிகரித்துள்ளது.

அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...

ட்ரையம்ப் நிறுவனத்தின் என்ஜினீயர்கள் சுழற்சி மந்தநிலையை சுமார் 7 சதவீதம் வரை குறைத்துள்ளனர். இதனால் லோ மற்றும் மிட்-ரேஞ்ச் என இரு விதமான சைலன்ஸர் சத்தங்களை ஓட்டுனர் பெறலாம். இதேபோல் தற்போதைய மாடலில் உள்ள அப்ஷிஃப்ட்டிற்கு பதிலாக புதிய அப் மற்றும் டவுன் விரைவான-‌ஷிஃப்டர் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Triumph India is expected to launch its updated Street Triple RS in March 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X