ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா?

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் புதிய டைகர் 850 ஸ்போர்ட் பைக்கின் தோற்றத்தையும், பைக்கை பற்றிய விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா?

பொது சாலைகளை மனதில் வைத்து கொண்டு, அதேநேரம் அட்வென்ஜெர் பயணங்களுக்கும் ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய டைகர் 850 ஸ்போர்ட், ட்ரையம்ப்பின் விலை குறைவான ஆரம்ப நிலை டைகர் பைக் மாடலாக விற்பனையை துவங்கவுள்ளது.

ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா?

பைக் குறித்து ட்ரையம்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள விபரங்களின்படி பார்க்கும்போது, புதிய டைகர் 850 ஸ்போர்ட் பைக் என்ஜின் அமைப்பு, சிறப்பம்சங்கள் மற்றும் தொழிற்நுட்பங்களில் டைகர் 900 பைக்கை தான் பெரிய அளவில் ஒத்து காணப்படுகிறது. இதனால் அந்த 900சிசி பைக்கிற்கு இணையான அன்றாட பயன்பாட்டு திறனை இந்த ஸ்போர்ட் பைக்கிலும் எதிர்பார்க்கலாம்.

ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா?

இருப்பினும் விலையினை அதனை காட்டிலும் சற்று குறைவானதாகவே ட்ரையம்ப் நிறுவனம் நிர்ணயிக்கும். டைகர் 900 ரேஞ்ச் பைக்குகளில் வழங்கப்படும் அதே 888சிசி, இன்லைன் 3-சிலிண்டர் என்ஜின் தான் புதிய 850 ஸ்போர்ட்டிலும் வழங்கப்பட்டாலும், சற்று திருத்தியமைக்கப்பட்ட ட்யூனில் இருக்கும்.

ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்த வகையில் டைகர் 850 ஸ்போர்ட்டில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 84 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-ல் 82 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்து வகையில் வழங்கப்படவுள்ளது. டி-பிளேன் க்ரான்க் உடன் 1-3-2 ஃபயரிங் வரிசையினால் குறைந்த ஆர்பிஎம்-ல் 850 3-சிலிண்டர் என்ஜினின் தன்மை வெளிப்படும்.

ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா?

குறைந்த என்ஜின் வேகத்தில் மென்மையாக மற்றும் நேர்த்தியாக பவர் மற்றும் டார்க்கை இந்த என்ஜின் வழங்கும் எனவும் ட்ரையம்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த என்ஜின் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் ஓட்டுனருக்கு கியரை மாற்ற கூடுதல் சவுகரியத்தை வழங்கும்.

ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா?

டைகர் 850 ஸ்போர்ட் பைக்கில் வழங்கப்பட்டுள்ள 19 இன்ச் மற்றும் 17 இன்ச் அலாய் சக்கரங்களில் ப்ரெம்போ ஸ்டைலிமா காலிபர்கள் முன் சக்கரத்தில் இரட்டை டிஸ்க் உடனும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் உடனும் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனிற்கு ப்ரீமியம் மார்ச்சோச்சி யூனிட்கள் முன் & பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா?

பின்புறத்தில் சஸ்பென்ஷன் யூனிட் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உடன் சாலை மற்றும் மழை என்ற இரு விதமான ரைடிங் மோட்களை வழங்கும் இந்த ஸ்போர்ட் பைக்கில் முழு-எல்இடி விளக்குகள், 5-இன்ச்சில் முழு-வண்ண டிஎஃப்டி திரை உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா?

இரண்டு-வருட முடிவிலா மைலேஜ் உத்தரவாதம் மற்றும் 16,000 கிமீ-ல் சர்வீஸ் இடைவெளியுடன் வரவுள்ள 850 ஸ்போர்ட் பைக்கின் மொத்த எடை 192 கிலோவில் கொண்டுவரப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள டைகர் 900 எக்ஸ்ஆர் பைக்கிற்கு மாற்றாக கொண்டுவரப்படும் புதிய டைகர் 850 ஸ்போர்ட் பைக்கின் இந்திய அறிமுகம் அடுத்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருக்கலாம்.

ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்த புதிய ட்ரையம்ப் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம். இந்திய சந்தையில் ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் பைக் அறிமுகமாகும் அதேசமயத்தில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் பிஎம்டபிள்யூ எஃப் 750 ஜிஎஸ் பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Triumph Tiger 850 Sport Unveiled; India Launch In Early 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X