புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் சிஸ்டத்துடன், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் புதிய டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரின் 2020 இசட்எக்ஸ் டிஸ்க் வேரியண்ட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் சிஸ்டத்துடன், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் புதிய டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

முக்கிய அப்கிரேட்டாக எலக்ட்ரிக் ஸ்டார்ட் தொழிற்நுட்பமான ‘ஐ-டச்ஸ்டார்ட்'-ஐ பெற்றுவந்துள்ள ஜூபிடரின் இசட்எக்ஸ் டிஸ்க் வேரியண்ட்டின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.69,052 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் சிஸ்டத்துடன், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் புதிய டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

புதிய இசட்எக்ஸ் டிஸ்க் வேரியண்ட்டை மேட் ஸ்டார்லைட் நீலம், ஸ்டார்லைட் நீலம் மற்றும் ராயல் வைன் என்ற மூன்று விதமான நிறங்களில் வாங்கலாம். ‘ஐ-டச்ஸ்டார்ட்', முழு பைக்கும் அமைதியாக இயங்கவும், க்ரான்க்கிங் சத்தத்தை குறைக்கவும் பெரிதும் உதவும்.

புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் சிஸ்டத்துடன், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் புதிய டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

இவற்றுடன் பேட்டரியின் ஆயுட்காலத்தையும் மேம்படுத்தும் இந்த தொழிற்நுட்பம் இலவச பராமரிப்பு அமைப்பையும் வழங்கும். இந்த தொழிற்நுட்பம் மட்டுமின்றி அனைத்திற்கும் ஒரே விதமான பூட்டு, ஸ்டேரிங் லாக், இருக்கை லாக் மற்றும் ஒற்றை சாவிக்கான துளையுடன் எரிபொருள் மூடி உள்ளிட்டவையும் புதிய ஜூபிடர் இசட்எக்ஸ் வேரியண்ட்டில் உள்ளன.

புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் சிஸ்டத்துடன், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் புதிய டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

இதனால் அனைத்து விதமான செயல்பாடுகளையும் இந்த ஸ்கூட்டரில் எளிதாக மேற்கொள்ளலாம். இந்த நிலையில் தற்போது புதியதாக சேர்க்கப்பட்டுள்ள டிஸ்க் ப்ரேக் கூடுதலான பாதுகாப்பு உணர்வை வாடிக்கையாளருக்கு வழங்கும்.

புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் சிஸ்டத்துடன், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் புதிய டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழிற்நுட்பங்களை வழங்க வேண்டும் என்ற டிவிஎஸ் நிறுவனத்தின் நோக்கத்தின் வெளிப்பாடாக வெளிவந்துள்ள ஜூபிடரின் இந்த புதிய வேரியண்ட், ஐ-டச்ஸ்டார்ட் உடன் ஈக்கோத்ரஸ்ட் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பத்தையும் ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜென்ரேஷன் சிஸ்டத்துடன் பெற்றுள்ளது.

புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் சிஸ்டத்துடன், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் புதிய டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

இந்த தொழிற்நுட்பங்களின் உதவியினால் ஸ்கூட்டர் 15 சதவீதம் கூடுதலான எரிபொருள்திறன், சிறப்பான ஸ்டேபிளிட்டி மற்றும் சுத்திகரிப்புடனான கூடுதலான ஆயுட்காலத்தையும் பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லேம்ப், 2-லிட்டர் க்ளோவ் பாக்ஸ், மொபைல் சார்ஜர் மற்றும் 21 லிட்டர் சேமிடம் உள்ளிட்டவை ஜூபிடர் ஸ்கூட்டரில் வழங்கப்படும் அம்சங்களாகும்.

புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் சிஸ்டத்துடன், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் புதிய டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

பயண சவுகரியத்தை மேம்படுத்தும் விதமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர்களை சஸ்பென்ஷன் அமைப்பாக பெற்றுள்ள ஜூபிடர் இசட்எக்ஸ் ஸ்கூட்டரில் 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 8 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-ல் 8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Jupiter ZX Disc Variant Launched With New Electric Start System
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X