Just In
- 1 hr ago
புல்லட் மீது ரொம்ப ஆசை! மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?
- 1 hr ago
201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!
- 1 hr ago
இந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்!
- 3 hrs ago
இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!
Don't Miss!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை!
- Finance
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..!
- Sports
பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி
- News
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம!
- Movies
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
- Lifestyle
ரொம்ப குண்டா இருக்கீங்களா? அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிவிஎஸ் ஸெஸ்ட் ஸ்கூட்டரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!
டிவிஎஸ் ஸெஸ்ட் ஸ்கூட்டரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவில் பெண்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஸ்கூட்டர் மாடல்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸெஸ்ட் ஸ்கூட்டர் முக்கிய இடத்தை வகிக்கிறது. எளிதான கையாளுமைக்கு பெயர் பெற்ற இந்த ஸ்கூட்டர் தற்போது பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

புதிய டிவிஎஸ் ஸெஸ்ட் பிஎஸ்-6 ஸ்கூட்டர் மாடலானது ஹிமாலயன் ஹை சீரிஸ் மற்றும் மேட் சீரிஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த புதிய மாடலில் முக்கிய அம்சமாக பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 110 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎஸ் பவரையும், 8.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பிஎஸ்-4 மாடலை ஒப்பிடும்போது, சக்தியை வெளிப்படுத்தும் திறனில் மாற்றமில்லை. ஆனால், டார்க் திறன் மேம்பட்டு இருப்பது சிறப்பான விஷயம்.

இந்த அதிக செயல்திறன் மிக்க ஸ்கூட்டர் மாடலாக இல்லையென்றாலும், குறைவான எடை கொண்டதாக இருப்பதால், சிறந்த பிக்கப்பை வழங்குகிறது. இது ஓட்டுபவர்களுக்கு நம்பிக்கையான, உற்சாகமான உணர்வை தரும்.

தற்போது இதன் எஞ்சினில் ஈக்கோ த்ரஸ்ட் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மூலமாக மாசு உமிழ்வு குறைக்கப்பட்டு இருப்பதுடன், மென்மையான இயக்கத்தையும் இதன் எஞ்சின் வழங்கும்.

அத்துடன், அதிக எரிபொருள் சிக்கனம், ஓட்டுதல் தரத்தை மேம்படுத்துவதிலும் புதிய பிஎஸ்-6 எஞ்சின் உறுதி செய்யும் என்று டிவிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

புதிய டிவிஎஸ் ஸெஸ்ட் ஸ்கூட்டரில் பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ட்யூப்லெஸ் டயர்கள், 19 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் அல்லது ஹெல்மெட் வைப்பதற்கான அறை உள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் வகை ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் கொண்ட சஸ்பென்ஷனும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஸ்கூட்டரில் முன்சக்கரத்தில் 110 மிமீ டிரம் பிரேக்கும், பின்சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளது. டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இல்லை.

புதிய டிவிஎஸ் ஸெஸ்ட் பிஎஸ்-6 ஸ்கூட்டர் சிவப்பு, நீலம், ஊதா, கருப்பு, மஞ்சள் மற்றும் விசேஷ நீல வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த புதிய ஸ்கூட்டர் மாடலுக்கு ரூ.58,460 சென்னை எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.