ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக்.. கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக் 350

ஆடம்பர தோற்றத்தில் களமிறங்க உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக் தற்போது மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

தமிழகத்தின் தலைநகரான சென்னையமை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ராயல் என்பீல்டு நிறுவனம், கிளாசிக் தோற்றத்தில் இருசக்கர வாகனங்களை தயாரிப்பதில் சிறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இது, இந்தியாவில் தனிக் காட்டு ராஜாவாக செயல்பட்டுக் கொண்டிருந்த வேலையில், ஜாவா நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிளாசிக் தோற்றத்திலான பைக்குகளை களமிறக்கி டஃப் கொடுத்து வருகின்றது.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

ஏற்கனவே, இந்திய வாகனத்துறையால் மந்தநிலையில் சிக்கி வாடிவந்த ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஜாவாவின் வருகை கூடுதல் இக்கட்டான சூழலையே ஏற்படுத்தியது.

இருப்பினும் சற்றும் கலங்காத ராயல் என்பீல்டு தன்னுடைய கெத்தை இந்தியாவில் நிலை நாட்டி வருகின்றது. மேலும், ஒரு சில மேலை நாடுகளிலும் தன்னுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகின்றது.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

தொடர்ந்து, சந்தையில் நிலவும் டிமாண்டை எப்போதும் நிலை நாட்டி வைத்துக் கொள்வதற்காக புதிய ரக வாகனங்களை அது அறிமுகம் செய்து வருகின்றது. இதற்கு, தற்போது இந்திய சந்தையில் நிலவும் போட்டியே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

அந்தவகையில், சமீபத்தில் பெண்கள் மற்றும் மெல்லிய தேகமுடைய இளைஞர்கள் இயக்குகின்ற வகையிலான சிறிய ரக இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அது அறிவித்தது. தொடர்ந்து, அதன் அனைத்து தயாரிப்புகளையும் பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் பணியையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்த பணியின்போதே அதன் பிரபல தயாரிப்புகள் சிலவற்றில் லேசான புதுப்பித்தலையும் அந்நிறுவனம் வழங்கி வருகின்றது.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

அந்தவகையில், புதிதாக மாற்றம் செய்யப்பட்ட, அதாவது, அடுத்த தலைமுறை மாடலாக புதுப்பிக்கப்பட்டுள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தற்போது மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கியுள்ளது.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

இந்த புதிய ஸ்பை படங்களின்மூலம் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கில் பேன்சியான அலாய் வீல்கள் மற்றும் ப்ளைஸ்கிரீன் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதுமட்டுமின்றி கூடுதலாக பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

குறிப்பாக, பிஎஸ்-6 தரத்திற்கு இணையான எஞ்ஜின் மிகப்பெரிய முக்கியமான புதுப்பித்தல்களில் ஒன்றாக உள்ளது. இத்துடன், புதிய பெயிண்டிங், எரிபொருள் சிக்கனம், குறைந்த எரிபொருள் எச்சரிக்கை, ட்யூப்லெஸ் டயர்கள் மற்றும் எஞ்ஜின் பகுதியில் நிறுவப்பட்ட கட்-ஆஃப் சைட் ஸ்டாண்டு உள்ளிட்டவை கூடுதல் புதுப்பிலாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு மாற்றங்களால் இந்த பைக் தற்போது அடுத்த தலைமுறை 2020 கிளாசிக் 350 பைக்காக அது மாறியுள்ளது.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

இந்த புதுப்பித்தலைப் பெற்ற ராயல் என்பீல்டு கிளாசிக் கேமிராவின் கண்களில் சிக்குவது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் அது கேமிராவின் சிக்கியிருக்கின்றது. அப்போது, மறைக்கப்பட்ட தோற்றத்திலேயே காட்சிக்குள்ளாகியது. ஆனால், இப்போது எந்தவொரு மறைவும் தெளிவான காட்சியை வழங்கியிருக்கின்றது. குறிப்பாக, பைக்கின் அனைத்து பாகங்களும் முழுமையாக காட்சியளிக்கின்ற வகையில் ஸ்பை செய்யப்பட்டுள்ளது.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

ஆகையால், முன்னதாக வெளிவராத ஒரு சில சிறப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தவகையில், 350 சிசி திறன் கொண்ட எஞ்ஜினே இதில் இடம்பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இதில், கிக் ஸ்டார்டர் இடம்பெறவில்லை. ஆகையால், செல்ஃப் ஸ்டார்டர் மட்டுமே இதை ஆன் செய்ய ஒரே வழி.

தொடர்ந்து, பைக்கில் நடுத்தர டிஜிட்டல் தரம் வாய்ந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

மேலும், இதேபோன்று கூடுதல் புதுப்பித்தலை ஸ்விட் கியர் மற்றும் டிசைன் தீம் உள்ளிட்டவற்றிலும் இந்த பைக் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, புதுவிதமான ரைடிங் அனுபவத்தை இந்த அடுத்த தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 வழங்கும் என தெரிகின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350 மாடலை மட்டுமின்றி புல்லட், தண்டர்பேர்டு மற்றும் தண்டர்பேர்டு எக்ஸ் ஆகிய மாடல்களையும் அடுத்த தலைமுறைக்கு இணக்கமாக புதுப்பித்து வருகின்றது.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

தற்போது விற்பனையில் இருக்கும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் பைக்கில் யுசிஇ பவர் பிளாணட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலும் அண்மையில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த 346 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்ஜின் 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் காணப்படுகின்றது.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

அனைத்து தயாரிப்புகளையும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனம் 500 சிசி திறன் கொண்ட பைக்குகளை மட்டும் பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தப்போவதில்லை என்று கூறப்படுகின்றது. இவை சந்தையை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில்கூட கிளாசிக் 500 டிரிபியூட் கருப்பு மாடலுக்கு விடைபெறும் விழா அனுசரிக்கப்பட்டது.

ஆடம்பர தோற்றத்தில் உலா வந்த ராயல் என்பீல்டு பைக் இதுதான்... கேமிராவின் கண்களில் மீண்டும் சிக்கிய கிளாசிக்350..!

ராயல் என்பீல்டின் இத்தகைய நடவடிக்கைக்கு 500சிசி பைக்குகள்மீது நிலவிய டிமாண்ட் குறைந்ததே முக்கிய காரணமாக இருக்கின்றது. தொடர்ந்து, விற்பனை எண்ணிக்கையையும் முந்தைய காலங்களைப் போன்று எட்ட முடியாமல் தவித்தது. ஆகையால், இந்த பைக்குகளை சந்தையை விட்டு வெளியேற்றும் பணியில் ராயல் என்பீல்டு தீவிரம் காட்டி வருகின்றது.

Image Courtesy: Motorbeam

Most Read Articles
English summary
Next Gen Royal Enfield Classic 350 Spied In TamilNadu. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X