இப்போதே ஆர்வத்தை தூண்டும் புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி 390... அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை...

கேடிஎம் நிறுவனம் ஆர்சி390 பைக் மாடலின் புதிய தலைமுறையின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவது நமது செய்திதளத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பவர்களுக்கு தெரிந்த விஷயமே. இந்த நிலையில் இந்த புதிய தலைமுறை கேடிஎம் பைக்கின் படம் ஒன்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தின் வாயிலாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

இப்போதே ஆர்வத்தை தூண்டும் புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி 390... அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை...

முன்னதாக புதிய கேடிஎம் ஆர்சி390 சில முறை சோதனை ஓட்டங்களின் போதும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றின் மூலமாக தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஆர்சி390 பைக் மாடலில் இருந்து புதிய தலைமுறை கவனிக்கத்தக்க மாற்றங்களை ஏற்று வருவதை அறிந்திருந்தோம்.

இப்போதே ஆர்வத்தை தூண்டும் புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி 390... அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை...

இதற்கிடையில் தான் தற்போது கேடிஎம் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள பைக்குகளின் வரிசையில் புதிய தலைமுறை ஆர்சி390-ன் பெயரை கொண்டுவந்துள்ளது. வெறும் பக்கவாட்டை மட்டுமே காட்டியப்படி இதுகுறித்த படத்தில் புதிய ஆர்சி390 பைக் நின்று கொண்டிருக்கிறது.

ஆனால் இதன் மூலமாகவே நிறைய டிசைன் மாற்றங்களை காண முடிகிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், புதியதாக இரு-துண்டுகளாக ட்ரெல்லிஸ் ஃப்ரேம், முற்றிலும் புதிய டிசைனில் எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட வடிவில் ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

இப்போதே ஆர்வத்தை தூண்டும் புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி 390... அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை...

அதேபோல் புதியதாக வழங்கப்பட்டுள்ள பெயிண்ட் அமைப்பு இந்த புதிய தலைமுறை பைக்கை தற்போதைய ஆர்சி390-ஐ காட்டிலும் எளிமையானதாக காட்டுகிறது. மேலும் பின் இருக்கை தற்போதைய கௌல் டிசைனில் இல்லாமல் பராம்பரியமான டிசைனில் வழங்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி அலாய் சக்கரங்களும் புதியதாக 5-ஸ்போக் டிசைனை பெற்றுள்ளன. இந்த படங்களில் ஹேண்டில்பாரில் பொருத்தப்படும் பின்புறம் பார்க்கும் கண்ணாடி மிகவும் சிறியதாக உள்ளது. ஒருவேளை பக்கவாட்டில் இருந்து பார்ப்பதினால் அவ்வாறு தெரிகிறதோ... என்னவோ...

இப்போதே ஆர்வத்தை தூண்டும் புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி 390... அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை...

குறுக்க நெடுக்காக கொடுக்கப்பட்டுள்ள புதிய ஃப்ரேம் 390 ட்யூக்கில் உள்ளதை போல் காட்சியளிக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதுதான் பைக்கிற்கு முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தை வழங்குகிறது. பின் பயணி கால் பாதம் வைப்பதற்கான பகுதி, தாழ்வான க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் உடன் ஓட்டுனரின் இருக்கை சற்று உயரமாகவே வழங்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு பணியில் உள்ள இரண்டாம் தலைமுறை ஆர்சி390 பைக்கிலும் அதே 373.3சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 43.5 பிஎச்பி மற்றும் 36 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது.

இப்போதே ஆர்வத்தை தூண்டும் புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி 390... அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை...

இருப்பினும் ட்யூக் மற்றும் அட்வென்ஜெர் வரிசை கேடிஎம் பைக்குகளை போல் புதிய ஆர்சி390 பைக்கிலும் இரு-திசை விரைவு மாற்றி வழங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி390-ன் இந்திய வருகையை அடுத்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி 310ஆர்ஆர் பைக்கிற்கு போட்டியாளராக விளங்கும் கேடிஎம்-ன் ஆர்சி390-ன் விலை தற்சமயம் ரூ.2.53 லட்சம் என்ற அளவில் உள்ளது. இதன் புதிய தலைமுறையின் விலை இதனை விட சற்று அதிகமாக ரூ.2.8 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Next-Generation KTM RC 390 Leaked Via Official Website
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X