எலெக்ட்ரிக் சைக்கிள், ஸ்கூட்டரை தொடர்ந்து அடுத்து எலெக்ட்ரிக் பைக்... சரவெடி காட்டும் நெக்ஸு!

பேட்டரியில் இயங்கும் புதிய பைக் மாடலை அறிமுகப்படுத்த நெக்ஸு நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்குகிறது நெக்ஸு நிறுவனம்!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வர்த்தகம் மிக சீராகவும், வலுவாகவும் மாறத் துவங்கி இருக்கிறது. இதனால், பல முன்னணி நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பில் அதிக ஆர்வமுடன் களமிறங்கி உள்ளன.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்குகிறது நெக்ஸு நிறுவனம்!

நாட்டிலேயே மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி கேந்திரமாகவும், சந்தையாகவும் மஹாராஷ்டிராவில் உள்ள புனே நகர் மாறி இருக்கிறது. பல எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் புனே நகரிலிருந்து வர்த்தகத்தை துவங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்குகிறது நெக்ஸு நிறுவனம்!

அந்த வகையில், புனே நகரை சேர்ந்த நெக்ஸு நிறுவனம் மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பில் மிக முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனமாக மாறி வருகிறது. தற்போது நெக்ஸு நிறுவனம் ரோம்பஸ், ரோட்லார்க் மற்றும் அயிலோ ஆகிய இ-ஹைப்ரிட் சைக்கிள்களை விற்பனை செய்து வருகின்றன. டெக்ஸ்ட்ரோ மற்றும் டெக்ஸ்ட்ரோ ப்ளஸ் என்ற இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து வருகிறது.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்குகிறது நெக்ஸு நிறுவனம்!

இந்த நிலையில், நெக்ஸு நிறுவனம் புதிய மின்சார பைக் மாடலை அறிமுகப்படுத்த இருப்பதாக இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்து நெக்ஸு வர்த்தகப் பிரிவுத் தலைவர் பங்கஜ் திவாரி கூறுகையில்,"புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்குகிறது நெக்ஸு நிறுவனம்!

கொரோனா பிரச்னை காரணமாக, எப்போது இந்த புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வருவோம் என்பது குறித்து இப்போது கூற இயலவில்லை. ஆனால், விரைவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். எங்களிடம் இ-ஹைப்ரிட் சைக்கிள், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் பைக் என அனைத்து வகையான இருசக்கர வாகனங்களையும் கொண்ட நிறுவனமாக சந்தையில் களமிறங்கி உள்ளோம்.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்குகிறது நெக்ஸு நிறுவனம்!

தற்போது மாதத்திற்கு 2,000 மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி திறன் எங்களிடம் உள்ளது. ஒரு உற்பத்திப் பிரிவில் தற்போது உற்பத்திப் பணிகள் நடக்கின்றன. இதனை மும்மடங்காக உயர்த்துவதற்கான கட்டமைப்பு வசதிகள் எங்கள் ஆலையில் உள்ளன," என்று தெரிவித்துள்ளார்.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்குகிறது நெக்ஸு நிறுவனம்!

இந்த நிலையில், நெக்ஸு நிறுவனம் நாடு முழுவதும் 70 டீலர்களுடன் செயல்பட்டு வருகிறது. நெக்ஸு ஹைப்ரிட் வகை சைக்கிள்களுக்கான பாகங்கள் 80 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு சப்ளையர்களிடம் இருந்தே பெறப்படுகின்றன.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்குகிறது நெக்ஸு நிறுவனம்!

நெக்ஸு நிறுவனத்தின் ரோட்லார்க் சைக்கிள் 55 முதல் 65 கிமீ தூரம் வரை பயணிக்கும். மணிக்கு 25 கிமீ வேகம் வரை செல்லும். இதில்,5.2 Ah மற்றும் 8.8 Ah பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்குகிறது நெக்ஸு நிறுவனம்!

இரண்டாவது மாடலானது அயிலோ இ-ஹைப்ரிட் சைக்கிளின் பேட்டரி 38 முதல் 45 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். 8.8Ah பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. ரோம்பஸ் இ-ஹைப்ரிட் சைக்கிளில் 5.2Ah பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சைக்கிள் 20 முதல் 25 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Since it is said that electric vehicles (EV) will be the future of mobility, automobile manufactures are focusing more on EVs. On the other hand, electric vehicles will not only save our environment as they produce zero emissions, but also save our natural resources (petrol & diesel) which are gradually depleting.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X