நார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது

ஐரோப்பாவை சேர்ந்த செய்திதளத்துடனான பேட்டியில் நார்டன் பிராண்டின் சிஇஒ நிறுவனத்தின் 2021ஆம் ஆண்டிற்கான திட்டங்களை பற்றி கூறியுள்ளார். அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

நார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது

நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தைக்காக டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால் அதன்பின் இந்த பேட்டி வரையில் இரு நிறுவனங்களும் அமைதி காத்துவந்தன.

நார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது

நார்டனை பொறுத்தவரையில், முன்னதாக இந்நிறுவனம் அதன் வி4 சூப்பர்பைக் மற்றும் அதன் கமெண்டோ 961 ஃப்ளாட்ஃபாரத்தின் மீது தான் கவனம் செலுத்தவுள்ளதாக கூறியிருந்தது. இதனால் வி4, அடுத்த ஆண்டில் யூரோ-5க்கு இணக்கமாக அப்கிரேட் செய்யப்பட்டுவிடும் என தெரிகிறது.

நார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது

அதேநேரம் கமெண்டோ ப்ளாடஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் பைக்குகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேற்பு குறைவதற்கு முன்னதாகவே விற்பனையை நிறுத்தி கொள்ளும் விதமாக குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் விற்பனைக்கு வரலாம்.

நார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது

தற்சமயம் விற்பனையில் உள்ள நார்டன் கமெண்டோ யூரோ-5க்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட போவதில்லை என்றாலும், கமெண்டோ பெயர்பலகை எதிர்கால பைக்குகளுக்கு பயன்படுத்தப்படும் என்று நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சிஇஒ ரஸ்ஸெல் தெரிவித்துள்ளார்.

நார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது

இதற்கு மத்தியில் நார்டனின் புதிய 650சிசி மோட்டார்சைக்கிளின் வருகையை எதிர்பார்த்தும் உலக வாடிக்கையாளர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் 650சிசி இணையான-இரட்டை என்ஜின் அமைப்பை பெற்றுவரும் இந்த மோட்டார்சைக்கிள் இன்னமும் வடிவமைப்பு பணிகளில் தான் உள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த ஆண்டில் இந்த பைக் அறிமுகமாக வாய்ப்பே இல்லை எனவும் ரஸ்ஸெல் கூறியுள்ளார்.

நார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது

இந்திய சந்தையை பொறுத்தவரையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவிப்பு மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது. நார்டனிடன் தற்சமயம் எந்த மோட்டார்சைக்கிளும் பிஎஸ்6-ஐ போல் ஐரோப்பாவில் பின்பற்றப்படும் யூரோ-5க்கு இணக்கமானதாக இல்லை.

நார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது

இந்நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை இங்கிலாந்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இது நிறைவு பெற்றவுடன் முதலாவதாக இங்கிலாந்து நாட்டு சந்தைக்கு தேவையான தயாரிப்புகள் உருவாக்கப்படும். அதன்பின்னர் நார்டன் ஏற்கனவே விற்பனை செய்துவரும் மற்ற நாட்டு சந்தைகளுக்கான தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

நார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது

அதன்பின்னரே இந்தியா போன்ற புதிய சந்தையின் பக்கம் நார்டன் கவனத்தை செலுத்தும். இதன் காரணமாக இந்த பிராண்டின் இந்திய வருகை விரைவில் இருக்கும் என்று நிச்சயம் கூற முடியாது. நார்டன் வி4 சூப்பர்பைக் நமது நாட்டு சந்தையில் மிக அதிகமான விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்பது உறுதி.

நார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது

டிவிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்டாலும், நிச்சயம் இந்த சூப்பர்பைக்கின் விலையை ரூ.20 லட்சத்தில் எதிர்பார்க்கலாம். இதனால் நார்டனின் புதிய 650சிசி மோட்டார்சைக்கிள் இந்திய சந்தைக்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.

நார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது

ஆனால் அதற்காக ராயல் என்பீல்டு 650சிசி பைக்குகளின் விலைகளில் இந்த பைக்கை எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் நிச்சயம் நார்டன் பைக்கின் விலை அவற்றின் விலையை காட்டிலும் ப்ரீமியமாகவே நிர்ணயிக்கப்படும். நார்டனின் இந்திய வருகையின் தாமதத்திற்கு கொரோனா வைரஸ் தான் முக்கிய காரணமாகும்.

Most Read Articles

மேலும்... #நார்டன் #norton
English summary
Norton 650cc motorcycles expected late next year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X