ஒகினவாவின் அசத்தலான ஆஃபர்!! 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...

இந்தியன் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினவா வரப்போகும் இந்த வருட பண்டிகை நாட்களுக்கிற்காக அட்டகாசமான சலுகைகளை அதன் விற்பனை மாடல்களுக்கு வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒகினவாவின் அசத்தலான ஆஃபர்!! 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...

இந்த சலுகை அறிவிப்பினால் ஒகினவா நிறுவனம் அனைத்து வாடிக்கையாளருக்கும் பரிசுகளையும், அதிர்ஷடசாலி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக எலக்ட்ரானிக் சாதனங்களையும் குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கவுள்ளது.

ஒகினவாவின் அசத்தலான ஆஃபர்!! 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...

இந்த குறிப்பிட்ட காலம், அக்டோபர் 24ஆம் தேதியில் இருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையில் மட்டுமே ஆகும். முன்பே கூறியதுபோல் ஒவ்வொரு முன்பதிவிற்கும் ஒரு அசத்தலான பரிசை வாடிக்கையாளருக்கு ஒகினவா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கி வருகிறது.

ஒகினவாவின் அசத்தலான ஆஃபர்!! 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...

அதேபோல் ஸ்கூட்டர்களை வாங்கும் ஒவ்வொருத்தரும் அவர்களது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முன்பதிவுகளுக்கு ரூ.6,000 மதிப்பிலான கிஃப்ட் வுவுசரை பெற்று வருகின்றனர். இவற்றுடன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ஷ்ட குலுக்கல் கூப்பனையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

ஒகினவாவின் அசத்தலான ஆஃபர்!! 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...

இந்த கூப்பனின் மூலமாக 10 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் வீட்டு உபயோக சாதனங்களை பெறவுள்ளனர். அவர்களில் ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் நம்ப முடியாத பரிசு பொருளாக ஒகினவாவின் பிரபல குறை-வேக ஸ்கூட்டரான ஆர்30-ஐ வீட்டிற்கு ஓட்டி செல்லவுள்ளார். அவர் யார் என்பது அடுத்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

ஒகினவாவின் அசத்தலான ஆஃபர்!! 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...

ஒகினவா பிராண்ட் சமீபத்தில்தான் அதன் இணையத்தள பக்கத்தின் மூலமாக தயாரிப்பு வாகனங்களை முன்பதிவு செய்யும் வசதியை கொண்டுவந்திருந்தது. ஒகினவாவின் டிஜிட்டல் தளத்தில் ஆப்ஷன்ஸ் வரிசையில் கஸ்டம் தீம் பெயிண்ட் செய்யப்பட்ட ஸ்கூட்டர்களையும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

ஒகினவாவின் அசத்தலான ஆஃபர்!! 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...

இந்த தீம்கள் தொழில்முறை கலைஞர்கள் மூலமாக உயர் தரத்திலான பெயிண்ட்களினால் வடிவமைத்து தரப்படுகிறது. சலுகைகள் & தள்ளுபடிகள் குறித்து ஒகினவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜீதெந்தர் சர்மா கூறுகையில், "தொற்றுநோய் காரணமாக, ஆட்டோமொபைல் உட்பட ஏராளமான தொழில்கள் மந்தநிலையை எதிர்கொண்டன.

ஒகினவாவின் அசத்தலான ஆஃபர்!! 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...

இருப்பினும், லாக்டவுன் தளர்விற்கு பிறகு, எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறோம். சமூக இடைவெளி கடைப்பிடிக்க மக்களை அரசாங்கம் அறிவுறுத்தி வருவதால் மக்கள் தனிப்பட்ட வாகனங்களைத் தேர்வு செய்யவே விரும்புகிறார்கள். இது அவர்களை இவி வாகனங்களை நோக்கிச் செல்ல வைக்கிறது.

ஒகினவாவின் அசத்தலான ஆஃபர்!! 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...

ஒகினாவாவும் சலுகைகளுடன் வாடிக்கையாளர்களின் அதே உணர்வைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றது. அதே நேரம், நாங்கள் ஒன்றாக மாசு இல்லாத நாட்டின் பெரிய இலக்கை நோக்கி செல்கிறோம்" என தெரிவித்தார். இந்த சலுகைகளினால் வரப்போகும் பண்டிகை காலத்தில் விற்பனை 40 சதவீதம் அதிகரிக்கும் என ஒகினவா நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

ஒகினவாவின் அசத்தலான ஆஃபர்!! 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...

மேலும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான விழிப்புணர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக கூறும் இந்நிறுவனம் இதன் மூலமாக மாசில்லா போக்குவரத்தை கொண்டுவர முடியும் எனவும் தெரிவிக்கிறது. குறை-வேக ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஒகினவா பிராண்டில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa announces festive offers on its array of electric two wheelers in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X