புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கியது ஒகினாவா... ஷோரூம் விலை ரூ.58,992...

இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினாவா புதிய ஆர்30 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக தனது விற்பனை மாடல்களின் எண்ணிக்கையை

அதிகரித்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கியது ஒகினாவா... ஷோரூம் விலை ரூ.58,992...

ஒகினாவாவின் லைன்அப்பில் புதியதாக இணைந்துள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.58,992 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொகை ரூ.2 ஆயிராமாக உள்ளது.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கியது ஒகினாவா... ஷோரூம் விலை ரூ.58,992...

வேகம் குறைவான ஸ்கூட்டர்கள் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய ஆர்30-ல் 1.25kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலமாக ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக 60கிமீ வரையில் இயக்கி செல்ல முடியும்.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கியது ஒகினாவா... ஷோரூம் விலை ரூ.58,992...

இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 4-ல் இருந்து 5 மணிநேரங்கள் வரை தேவைப்படும். அதிகப்பட்சமாக 25kmph வேகத்தில் இயங்கும் இந்த இ-ஸ்கூட்டரின் மைக்ரோ-சார்ஜரில் ஆட்டோ கட் செயல்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கியது ஒகினாவா... ஷோரூம் விலை ரூ.58,992...

இரு விதமான நிறங்களில் அலங்கரிக்கப்பட்ட முன்புறத்துடன் விற்பனைக்கு வந்துள்ள புதிய ஆர்30 ஸ்கூட்டரில் கவசத்தில் பொருத்தப்பட்ட ஹெட்லைட், அலாய் சக்கரங்கள் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கியது ஒகினாவா... ஷோரூம் விலை ரூ.58,992...

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பளபளப்பான சிவப்பு, மெட்டாலிக் ஆரஞ்ச், முத்தின் வெள்ளை, கடலின் பச்சை, உதயமாகும் சூரியனின் மஞ்சள் என்ற 5 நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கியது ஒகினாவா... ஷோரூம் விலை ரூ.58,992...

இயந்திர பாகங்களாக ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்புறத்திலும், இரட்டை ஷாக் அப்சார்பர்கள் பின்புறத்திலும் சஸ்பென்ஷனிற்கு பொருத்தப்பட்டுள்ளன. ப்ரேக் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் ட்ரம் ப்ரேக்குகள் உள்ளன.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கியது ஒகினாவா... ஷோரூம் விலை ரூ.58,992...

இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு ரீஜெனரேட்டிவ் ஆற்றல் உடன் இ-ஏபிஎஸ்-ஐயும் கொண்டுள்ள ஒகினாவாவின் புதிய ஆர்30 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிக்கு மூன்று வருட உத்தரவாதத்தை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. அதேபோல் இதன் 250 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரும் 3-வருட/30 ஆயிர கிமீ உத்தரவாதத்தை பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
Okinawa R30 electric scooter launched at Rs 58,992
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X