தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை அமைக்கும் ஓலா... இதனால் என்ன பலன்?

உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் அமைக்க இருப்பதாக ஓலா தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை அமைக்கும் ஓலா... இதனால் என்ன பலன் தெரியுமா?

கால் டாக்சி சேவையில் தொடங்கி தற்போது மின்சார வாகன உற்பத்தியிலும் ஓலா நிறுவனம் கால்தடம் பதிக்க ஆரம்பித்துள்ளது. அண்மையில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த எடெர்கோ நிறுவனத்தின் பங்குகளை ஓலா நிறுவனம் கையகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே எடெர்கோ நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களை உலக நாடுகளில் களமிறக்க இருப்பதாக அது அறிவித்திருந்தது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை அமைக்கும் ஓலா... இதனால் என்ன பலன் தெரியுமா?

அந்தவகையில், ஓலா நிறுவனம் கால் தடம் பதிக்க திட்டமிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த திட்டத்தைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தி ஆலையை நிறுவ அது திட்டமிட்டது. இதற்காக பல்வேறு மாநிலங்களுடன் அது பேச்சு வார்த்தை நடத்தி வந்தநிலையில், தமிழகத்திற்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை அமைக்கும் ஓலா... இதனால் என்ன பலன் தெரியுமா?

ஆமாங்க, ஓலாவின் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு ஆலை தமிழகத்திலேயே அமைய இருக்கின்றது. இதுகுறித்த தகவலை அறிக்கையின் வாயிலாக ஓலா உறுதி செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதாக அது தகவல் வெளியிட்டிருக்கின்றது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை அமைக்கும் ஓலா... இதனால் என்ன பலன் தெரியுமா?

இந்த புதிய தொழிற்சாலை கிட்டத்தட்ட 10 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கும் என கூறப்படுகின்றது. மேலும், ஆரம்பத்தில் ஆண்டு ஒன்றிற்கு 2 மில்லியன் யூனிட் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் உற்பத்தி திறனில் இது இயங்க இருக்கின்றது. இதற்காக 2,400 கோடி ரூபாயை ஓலா ஒதுக்கியுள்ளது. இந்த முதலீடு எதிர்காலத்தில் இந்தியாவிற்கான மின்சார, வாகனத்தை பெருமளவில் பூர்த்தி செய்ய உதவும்.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை அமைக்கும் ஓலா... இதனால் என்ன பலன் தெரியுமா?

குறிப்பாக, இந்தியாவின் வாகன இறக்குமதி சார்பை குறைக்க இது வழிவகுக்கும் எனவும் கூறப்படுகின்றது. மேலும், மின்சார வாகன உற்பத்தி மற்றும் சந்தையிலும் இந்தியாவை ஓர் முக்கிய வீரராக மற்றும் தலைவராக நிலை நிறுத்த ஓலாவின் இந்த புதிய தொழிற்சாலை உதவ இருக்கின்றது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை அமைக்கும் ஓலா... இதனால் என்ன பலன் தெரியுமா?

இந்த தொழிற்சாலையின் மூலம் இந்தியாவிற்கான மின் வாகனத் தேவையை மட்டுமின்றி ஐரோப்பா, ஆசியா, லத்தீன், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் மின் வாகனத் தேவையையும் இது பூர்த்தி செய்ய இருக்கின்றது. மேலும், மிக விரைவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் மின்சார ஸ்கூட்டரையும் ஓலா அறிமுகம் செய்ய இருப்பதாக புதிய அறிவிப்பில் தெரிவித்திருக்கின்றது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை அமைக்கும் ஓலா... இதனால் என்ன பலன் தெரியுமா?

இதுகுறித்து ஓலாவின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறியதாவது, "உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கான எங்கள் திட்டங்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது ஓலாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இது உலகின் அட்வான்ஸ்ட் உற்பத்தி வசதிகளைக் கொண்ட ஆலையாக செயல்படும். இந்த தொழிற்சாலை மூலம் உலகளாவிய சந்தைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகள் தயாரிக்கப்பட இருக்கின்றன. இது, இந்தியாவின் திறமையையும் வெளிப்படுத்த உதவும்" என்றார்.

Most Read Articles

English summary
Ola Plans To Set Up World’s Largest Scooter Factory In TamilNadu. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X