Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 6 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எதிர்பார்த்த மின்சார பைக்கின் டெலிவரி பணி தொடங்கியது... அடுத்து தமிழகம்தான்... ரொம்ப காத்திருக்க வேண்டாம்!!
எதிர்பார்த்த மின்சார பைக்கின் டெலிவரி பணி தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நொய்டாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒன் எலெக்ட்ரிக் நிறுவனம், அதன் அதிவேக மின்சார இருசக்கர வாகனமான க்ரிடன் (KRIDN) பைக்கின் டெலிவரி பணியைத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மின்சார பைக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ஒன் எலெக்ட்ரிக் அறிமுகம் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்தே முன்னதாக புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு பைக்கை டெலிவரி கொடுக்கும் பணியில் அது களமிறங்கியுள்ளது. ஆரம்பகட்டமாக ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் மட்டுமே பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்விரு நகரங்களிலேயே இப்பைக்கிற்கு ஏகபோகமான டிமாண்ட் நிலவியது. இதனைத் தொடர்ந்தே, இரு நகரங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்சார பைக்கின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மின்சார பைக்கினை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பினை தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

இதனை இயக்கி பார்த்த அனைவரும் மின்சார பைக்கின் திறனைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றனர். மேலும், அதன் சூப்பர் பவர் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கண்டு புகழ்ந்து தள்ளியதாக ஒன் எலெக்ட்ரிக் தகவல் தெரிவித்திருந்தது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே க்ரிடன் பைக்கின் டெலிவரி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

மின்சார பைக்கின் பக்கம் மக்களைக் கூடுதலாக கவர்கின்ற வகையில் எளிய கடன் மற்றும் சுலபமான மாதத் தவணை திட்டத்தை ஒன் எலெக்ட்ரிக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இப்பைக்கிற்கு இந்தியாவில் மட்டுமின்றி சில வெளிநாடுகளில் இருந்தும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே விரைவில் வெளிநாடுகளில் இப்பைக்கை தயாரிப்பு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வருகின்ற ஜனவரி மாதம் இப்பைக் விற்பனைக்குக் கொண்டுவரப்பட இருக்கின்றது.

இதைத்தொடர்ந்தே மஹாராஷ்டிரா மற்றும் டெல்லி என்சிஆர் உள்ளிட்ட மாநிலங்களில் க்ரிடன் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. தற்போது தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே விருப்பம் கிடைத்திருப்பதாக ஒன் எலெக்ட்ரிக் தெரிவித்திருக்கின்றது.

நகர்புற பயன்பாட்டை மையப்படுத்தியே இந்த மின்சார பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிக வேகத்தில் செல்லக்கூடியது. அதாவது மணிக்கு அதிகபட்சமாக 95 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இப்பைக்கில் 165 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது.

இந்த விலை ரூ. 1.29 லட்சம் ஆகும். இந்த மிகக் குறைந்த விலையே இந்திய மக்களை இப்பைக்கின் பக்கம் கவர்ந்து வருகின்றது. இதுமட்டுமின்றி விலைக் குறைந்த மற்றும் குறைந்த வேகம் திறன் கொண்ட மின்சார பைக்கையும் ஒன் எலெக்ட்ரிக் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதேசமயம், தற்போது டெலிவரி பணிகள் இந்தியாவில் தொடங்கியிருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.