Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
100 சதவீத இந்திய உதிரி பாகங்களுடன் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: பியாஜியோ திட்டம்!
வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்திக்காக 100 சதவீத உதிரிபாகங்களையும் இந்தியாவில் உள்ள உள்ளூர் சப்ளையர்களிடம் இருந்து பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பியாஜியோ குழுமம் ஆராய்ந்து வருகிறது.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமம் இந்தியாவில் வர்த்தக வாகனங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. அத்துடன், வெஸ்பா, ஏப்ரிலியா மற்றும் மோட்டோ குஸ்ஸி உள்ளிட்ட பிராண்டுகளில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையடுத்து, இந்த சந்தையில் களமிறங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை அறிமுகப்படுத்திவிட்ட அந்த நிறுவனம் அடுத்து மின்சார ஸ்கூட்டரை களமிறக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலித்து வருகிறது.

அதன்படி, முழுக்க முழுக்க இந்திய சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற்று வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மணிகன்ட்ரோல் தளத்திடம் பியாஜியோ குழுமத்தின் இந்தியப் பிரிவு தலைவர் டியாகோ கிராஃபி கூறுகையில்,"இந்தியாவில் சாதகமான சூழல் வரும்போது உடனடியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவிலேயே 100 சதவீத பாகங்களை சப்ளை பெற்று வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். தற்போது அனைத்து உதிரிபாகங்களையும் இந்தியாவிலேயே பெற முடியாத சூழல் உள்ளது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரி உள்ளிட்ட முக்கிய பாகங்களை சீனா அல்லது பிற வெளிநாடுகளில் இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. மேலும், போதுமான சார்ஜ் ஏற்றும் நிலையங்களும் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலை மாறும்போது உடனடியாக வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு வருவதற்கு பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இல்லையெனில், போட்டியாளர்களுக்கு மிக நெருக்கமான அல்லது சவாலான விலையை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்படும் என்று பியாஜியோ குழுமம் கருதுகிறது. தற்போது இந்தியாவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் மற்றும் அதற்கான கட்டமைப்பு வசதிகள் வெகுவாக மேம்பட்டு வருகின்றன. எனவே, விரைவில் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியா கொண்டு வருவதற்கு பியாஜியோ முடிவு செய்யும் வாய்ப்புள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பியாஜியோ நிறுவனம் தனது அரங்கில் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பார்வைக்கு வைத்திருந்தது. வெஸ்பா எலெக்ட்ரிக்கா என்ற பெயரிலான இந்த ஸ்கூட்டரில் 4kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 70 கிமீ வேகமும், பேட்டரி திறனில் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனையும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.