Just In
- 30 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேடிஎம் 390 பைக் மார்க்கெட்டை குறிவைத்த ஏப்ரிலியா... தரமான சம்பவம் காத்திருக்கு!
இந்தியாவில் 300- 400சிசி இடையிலான ரகத்தில் புத்தம் புதிய பைக் மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக ஏப்ரிலியா தெரிவித்துள்ளது. இந்தியர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டி இருக்கும் இந்த புதிய பைக் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ வாகன குழுத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏப்ரிலியா நிறுவனம் இந்தியாவின் இருசக்கர வாகன மார்க்கெட்டில் உள்ள வர்த்தக வளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் முனைப்பில் உள்ளது. பிரிமீயம் ஸ்கூட்டர் மாடல்கள் மற்றும் சூப்பர் பைக் மாடல்களுடன் இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் ஏப்ரிலியா அடுத்து வர்த்தக வளம் உள்ள சந்தைகளிலும் புதிய மாடல்களை களமிறக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, கேடிஎம் நிறுவனத்தின் ஆளுகையின் கீழ் உள்ள 300- 400சிசி இடையிலான ரகத்தில் புத்தம் புதிய பைக் மாடலை களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் அறிமுக நிகழ்வின்போது, இந்த தகவலை பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டியாகோ கிராஃபி உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த புதிய பைக் மாடலானது ஏப்ரிலியா இந்திய பிரிவு எஞ்சினியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைகளின்படி, இத்தாலியில் வடிவமைக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.

அதேநேரத்தில், இந்த புதிய பைக் மாடலானது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என்பதுதான் ஆகச்சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவிலிருந்து புதிய ஏப்ரிலியா பைக்கை ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பியாஜியோ திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய பைக் மாடல் குறித்த அதிகத் தகவல்களை கிராஃபி வெளியிடவில்லை. ஆனால், இதற்கான பணிகளில் பியாஜியோ குழுமம் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

கேடிஎம் பாணியில் இந்த ஒரே சேஸீ, எஞ்சின் உள்ளிட்ட முக்கிய பாகங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இரண்டு வகை பைக் மாடல்களாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஃபேரிங் பேனல் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக மாடலாகவும், நேக்கட் வகை தோற்றத்துடன் கூடிய மற்றொரு ரக மாடலாகவும் அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த ரகத்தில் கேடிஎம் 390 ட்யூக், ஆர்சி 390, ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மற்றும் க்ரூஸர் பைக் மாடல்களை எதிர்த்து களம் காண வேண்டும். எனினும், ஏப்ரிலியா பைக் மாடலை அதிக பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்துவதற்கும் பியாஜியோ வசம் திட்டம் உள்ளதாக தெரிகிறது.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.