புதிதாக 100 ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் பியாஜியோ!

அடுத்த ஆண்டு 100 புதிய ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்களை இந்தியாவில் திறப்பதற்கு பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிதாக 100 ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் பியாஜியோ!

இந்தியாவில் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா பிராண்டுகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக, இரு நிறுவனங்களின் தனித்துவமான ஸ்கூட்டர் மாடல்களுக்கு பெரும் வாடிக்கையாளர் வட்டம் உருவாகி வருகிறது. ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா ஆகிய நிறுவனங்களுமே பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

புதிதாக 100 ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் பியாஜியோ!

இந்த நிலையில், இந்திய இருசக்கர வாகன சந்தையில் உள்ள வர்த்தக வளத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் திட்டங்களை தீட்டி வருகிறது பியாஜியோ குழுமம். இதற்காக, பல புதிய இருசக்கர வாகன மாடல்களை இரு பிராண்டிலும் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

புதிதாக 100 ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் பியாஜியோ!

விரைவில் ஏப்ரிலியா பிராண்டில் எஸ்க்ஸ்ஆர்160 என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் வர இருக்கிறது. பிரம்மாண்டத் தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் வரும் இந்த பிரிமீயம் ஸ்கூட்டர் இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக 100 ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் பியாஜியோ!

இந்த நிலையில், புதிய மாடல்களின் வர்த்தகத்திற்கு வலு சேர்க்கும் விதத்திலும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்குவதற்கும் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா தயாரிப்புகளுக்காக புதிதாக 100 டீலர்களை இந்தியாவில் நியமிக்க பியாஜியோ திட்டமிட்டுள்ளதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிதாக 100 ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் பியாஜியோ!

மேலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா நிறுவனங்கள் இந்தியாவில் 350 டீலர்களுடன் செயல்படுவதற்கான திட்டத்துடன் பியாஜியோ வர்த்தகத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

புதிதாக 100 ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் பியாஜியோ!

இந்த இரண்டு பிராண்டுகளிலும் வர இருக்கும் புதிய இருசக்கர வாகன மாடல்கள் மற்றும் புதிய டீலர்களை பயன்படுத்தி வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை இலக்கை எட்டுவதற்கும் பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது.

புதிதாக 100 ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் பியாஜியோ!

ஏப்ரிலியா பிராண்டில் ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமின்றி, டூவானோ 400, ஆர்எஸ்400, ஆர்எஸ்660 மற்றும் டூவானோ 660 ஆகிய பைக் மாடல்களையும் கொண்டு வருவதற்கு பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த பைக் மாடல்கள் எப்போது இந்தியா கொண்டு வரப்படும் என்பது குறித்து இதுவரை உறுதியானத் தகவல் இல்லை.

Most Read Articles

English summary
Piaggio is planning to open 100 new Aprilia-Vespa dealerships in India by next year.
Story first published: Saturday, December 12, 2020, 12:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X