விற்பனைக்கு வந்தது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப ரொம்ப குறைவு

இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ப்யூர் இவி, இட்ரான்ஸ்+ என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.56,999 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனைக்கு வந்தது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப ரொம்ப குறைவு

இட்ரான்ஸ்+ எலக்ட்ரிக் கூட்டரில் 1.25 kWh என்ற அளவில் சிறிய பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி மூலமாக முழு சார்ஜில் 65கிமீ வரையில் ஸ்கூட்டரை இயக்க முடியும் என்றும் ப்யூர் இவி நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்கூட்டரில் முக்கிய அம்சங்களாக ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங், இஏபிஎஸ் மற்றும் எஸ்ஒசி இண்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் எஸ்ஒசி இண்டிகேட்டர் ஆனது பேட்டரியின் சார்ஜ் சதவீதத்தையும் வெளிகாட்டும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.

இவைதவிர்த்து மற்றப்படி ஸ்கூட்டரை பற்றிய வேறெந்த தகவலையும் தயாரிப்பு நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் தொழிற்நுட்ப நிறுவனத்தின் ஆலோசனைகளின்படி ப்யூர் இவி என்ற இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

விற்பனைக்கு வந்தது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப ரொம்ப குறைவு

ஆனால் தயாரிப்புகளில் பொருத்தப்படும் பேட்டரிகளை தயாரிப்பு நிறுவனமே சொந்தமாக தனது தொழிற்சாலையில் தயாரிக்கிறது. அதேபோல் நிறுவனத்திற்கான ஆராய்ச்சி மையமும் ஹைதராபாத் ஐஐடி முகாமிற்குள் இல்லை. ப்யூர் இவி நிறுவனத்தின் ஆராய்ச்சி குழு அதிக ரேஞ்ச்சை கொண்ட லித்தியம் பேட்டரிகளை வடிவமைக்கிறது.

விற்பனைக்கு வந்தது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப ரொம்ப குறைவு

தற்போதைய சூழலில் மக்கள் தனி பயன்பாட்டு வாகனங்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தான் மிகவும் மலிவான விலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ப்யூர் இவி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் ரோகித் வதேரா தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் நிஷாந்த் டோங்கரி கூறுகையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து தொழிற்நுட்ப வசதிகளுடனும் இட்ரான்ஸ்+ ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது எங்களது நிறுவனத்தின் மற்றுமொரு முக்கியமான மைல்கல் ஆகும்.

விற்பனைக்கு வந்தது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப ரொம்ப குறைவு

நாங்கள் இதன் அதி-வேக வேரியண்ட்டின் தயாரிப்பிலும் ஈடுப்பட்டு வருகிறோம். இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகவுள்ள இந்த வேரியண்ட்டின் விலை மிகவும் கவர்ச்சிகரமானதாக ரூ.69,999 என்ற அளவிலும், சிங்கிள் சார்ஜில் 90கிமீ தூரமும், அதிகப்பட்சமாக 55 kmph என்ற வேகத்திலும் இயங்கக்கூடியதாக இருக்கும் என்றார்.

விற்பனைக்கு வந்தது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப ரொம்ப குறைவு

ப்யூர் இவி நிறுவனம் இப்ளூட்டோ 7ஜி, இப்ளூட்டோ, இட்ரான்ஸ் மற்றும் இட்ரான் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏற்கனவே சந்தைப்படுத்தி வருகிறது. வருடத்திற்கு கிட்டத்தட்ட 2 லட்ச இவி ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறன் கொண்ட இந்நிறுவன தொழிற்சாலையின் மொத்த பேட்டரி திறன் 5 GWh ஆகும்.

ஆனால் தற்சமயம் 20 ஆயிர இவி வாகனங்கள் மற்றும் 0.5 GWh என்ற அளவில் தான் ப்யூர் இவி நிறுவனத்தின் தொழிற்சாலையின் திறன் உள்ளது. ஆனால் மொத்த தயாரிப்பு திறனை 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் எட்டிவிடுவோம் என இந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
Pure EV ETrance+ electric scooter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X