டிவிஎஸ் பிராண்டில் இருந்து அடுத்த வெளிவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதானா? வெளியான தகவல்கள்

டிவிஎஸ் பிராண்டில் இருந்து அடுத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கிரியோன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் செய்திகளை இனி பார்ப்போம்.

டிவிஎஸ் பிராண்டில் இருந்து அடுத்த வெளிவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதானா? வெளியான தகவல்கள்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப் பெரிய அளவில் எந்தவொரு விளம்பரமும் இன்றி இந்த வருட துவக்கத்தில் அறிமுகமானது. இதன் 4.4 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரில் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.

டிவிஎஸ் பிராண்டில் இருந்து அடுத்த வெளிவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதானா? வெளியான தகவல்கள்

இவற்றின் உதவியுடன் முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 78 கிமீ வரையில் இயங்கும் ஐக்யூப் ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் 78 kmph ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நகர்புற வாழ்க்கைக்கு மிகவும் ஏற்ற வாகனமாக ஏற்கனவே மாறிவிட்டது.

டிவிஎஸ் பிராண்டில் இருந்து அடுத்த வெளிவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதானா? வெளியான தகவல்கள்

இந்த நிலையில் வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவை பெரிதாக்க டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் அடுத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கிரியோன் வெளிவரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிவிஎஸ் பிராண்டில் இருந்து அடுத்த வெளிவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதானா? வெளியான தகவல்கள்

இந்த ஆண்டு துவக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் 1200 வாட்ஸ் ரீஜெனரேட்டிவ் உதவி மோட்டார், 48 வோல்ட் லித்தியம்-இரும்பு பேட்டரி மற்றும் ஒருங்கிணைந்த இயக்கத்திற்கான ஜெனரேட்டர் உடன் ஜெப்பேலின் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தி இருந்தது.

டிவிஎஸ் பிராண்டில் இருந்து அடுத்த வெளிவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதானா? வெளியான தகவல்கள்

இந்த நிகழ்ச்சியில் ஜெப்பேலின் கான்செப்ட் மாடலுக்கு கிரியோன் என பெயர் வைக்கப்பட்டிருந்தது. 0-வில் இருந்து 60 kmph என்ற வேகத்தை வெறும் 5.1 வினாடிகளில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எட்டிவிடும் எனவும், ஸ்கூட்டர் முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 80 கிமீ வரையில் இயங்கும் எனவும் கூறப்படுகிறது.

டிவிஎஸ் பிராண்டில் இருந்து அடுத்த வெளிவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதானா? வெளியான தகவல்கள்

இதன் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்ய 1 மணிநேரம் போதும் என ஆட்டோ எக்ஸ்போவின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் விற்பனைக்கு வரும் கிரியோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் செயல்திறன்கள் இதனை காட்டிலும் சிறப்பானதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் பிராண்டில் இருந்து அடுத்த வெளிவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதானா? வெளியான தகவல்கள்

பேட்டரியின் சார்ஜ் அளவை காட்டும் விதத்திலான டிஎஃப்டி திரை, ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பு போன்ற இணைப்பு வசதி, பார்க்கிங் உதவி மற்றும் ரைடிங் மோட்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கிரியோன் கான்செப்ட் மாடல், ஐக்யூப்-ஐ காட்டிலும் வீட்டு உபயோக ஸ்மார்ட் சார்ஜிங் மற்றும் பொது சார்ஜிங் நிலையங்களை தேடுதல் உள்ளிட்ட விஷயங்களில் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Report says Creon will be the next electric scooter from TVS.
Story first published: Tuesday, November 10, 2020, 9:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X