650 ட்வின்ஸ் பைக்குகளில் அதிரடியாக புதிய மாற்றத்தை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!! கவனத்தை பெறுமா?

வருகிற 2021 பிப்ரவரி மாதத்தில் தற்சமயம் விற்பனையில் உள்ள ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகள் அலாய் சக்கரங்களை பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

650 ட்வின்ஸ் பைக்குகளில் அதிரடியாக புதிய மாற்றத்தை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!! கவனத்தை பெறுமா?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650சிசி பைக்குகளாக இண்டர்செப்டர் மற்றும் காண்டினெண்டல் ஜிடி பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்சமயம் இவற்றில் பழமையான தோற்றத்திற்காக ஸ்போக் சக்கரங்களே வழங்கப்படுகின்றன. அலாய் சக்கரங்களை கூடுதல் ஆக்ஸஸரீயாகவே பெற முடியும்.

650 ட்வின்ஸ் பைக்குகளில் அதிரடியாக புதிய மாற்றத்தை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!! கவனத்தை பெறுமா?

ஆனால் 650 ட்வின் பைக்குகளில் அலாய் சக்கரங்களை வழங்க அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து அதிக கருத்துகள் வர தொடங்கியதை அடுத்து, தற்போது புதிய வார்ப்பு அலாய் சக்கரங்களுக்கான விரிவான ஆயுள் மற்றும் சரிபார்ப்பு சோதனைகளை மேற்கொண்டு வருவதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

650 ட்வின்ஸ் பைக்குகளில் அதிரடியாக புதிய மாற்றத்தை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!! கவனத்தை பெறுமா?

ராயல் என்பீல்டின் இந்த சோதனைகளை நிறைவு பெற்றப்பின் புதிய அலாய் சக்கரங்கள் வருகிற பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். இதற்கிடையில் சமீபத்தில் ராயல் என்பீல்டு 650 க்ரூஸர் பைக் ஒன்று அலாய் சக்கரங்களுடன் சென்னையில் சாலை சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது.

650 ட்வின்ஸ் பைக்குகளில் அதிரடியாக புதிய மாற்றத்தை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!! கவனத்தை பெறுமா?

இந்த 650சிசி க்ருஸர் பைக் அடுத்த ஆண்டில்தான் அறிமுகமாகவுள்ளதால் அதற்கு முன்னதாக அதில் வழங்கப்படவுள்ள அலாய் சக்கரங்களின் டிசைன் தற்போதைய 650 ட்வின் பைக்குகளுக்கு வழங்கப்பட்டுவிடும்.

650 ட்வின்ஸ் பைக்குகளில் அதிரடியாக புதிய மாற்றத்தை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!! கவனத்தை பெறுமா?

புதிய அலாய் சக்கரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தபட்டபின், விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் MiY (மேக் இட் யுவர்ஸ்) தனிப்பயனாக்குதல் தளம் வழியாக அவற்றை தேர்ந்தெடுக்க முடியும். அல்லது டீலர்ஷிப் மையங்களையும் அணுகலாம்.

650 ட்வின்ஸ் பைக்குகளில் அதிரடியாக புதிய மாற்றத்தை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!! கவனத்தை பெறுமா?

இந்த புதிய அலாய் சக்கரங்களில் ட்யுப்லெஸ் டயர்கள் பொருத்தப்படவுள்ளன. இத்தகைய டயர்களை பஞ்சரின்போது சக்கரத்தில் இருந்து வெளியே எடுக்க வேண்டியதில்லை. இருப்பினும் சில வாடிக்கையாளர்களுக்கு அலாய் சக்கரங்கள் பிடிக்காமலும் போகலாம்.

650 ட்வின்ஸ் பைக்குகளில் அதிரடியாக புதிய மாற்றத்தை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!! கவனத்தை பெறுமா?

ஏனெனில் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள் பழமையான தோற்றத்தை கொண்டவை. அவற்றிற்கு அதே பழமையான வடிவத்தை கொண்ட ஸ்போக் சக்கரங்கள்தான் ஏற்றதாக விளங்குகின்றன. அலாய் சக்கரங்கள் பைக்கின் தோற்றத்தை கெடுக்கும் என்பது சிலரது கருத்து.

Most Read Articles

English summary
Royal Enfield 650 Twins To Get Alloy wheels option by Feb 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X