ரகசிய சோதனை ஓட்டத்தில் ராயல் என்ஃபீல்டு 650 சிசி க்ரூஸர் பைக்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650சிசி க்ரூஸர் ரக பைக் சாலை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் ஸ்பை படங்கள், கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ரகசிய சோதனை ஓட்டத்தில் ராயல் என்ஃபீல்டு 650 சிசி க்ரூஸர் பைக்!

நடுத்தர வகை க்ரூஸர் பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிக வலுவான விற்பனையை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கவும், விற்பனையை அதிகரிக்கவும் புதிய ரக பைக் மாடல்களை அறிமுகப்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

ரகசிய சோதனை ஓட்டத்தில் ராயல் என்ஃபீல்டு 650 சிசி க்ரூஸர் பைக்!

இந்த நிலையில், தற்போது 650சிசி ரகத்தில் மூன்றாவது பைக் மாடலை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது. அதுவும் இது அருமையான க்ரூஸர் பைக் மாடலாக வர இருக்கிறது.

இதுவரை வந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் க்ரூஸர் பைக் மாடல்களில் இருந்து இது முற்றிலும் வேறுபட்ட, அட்டகாசமான டிசைன் அம்சங்களை பெற்றிருப்பது ரஷ்லேன் தளம் மூலமாக வெளியாகி இருக்கும் வீடியோ மூலமாக காண முடிகிறது.

ரகசிய சோதனை ஓட்டத்தில் ராயல் என்ஃபீல்டு 650 சிசி க்ரூஸர் பைக்!

கடந்த 2018ம் ஆண்டு இத்தாலி நாட்டில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ராயல் என்ஃபீல்டு கான்செப்ட் கேஎக்ஸ் மோட்டார்சைக்கிளின் டிசைன் அம்சங்களை மனதில் வைத்து இந்த புதிய பைக் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ரகசிய சோதனை ஓட்டத்தில் ராயல் என்ஃபீல்டு 650 சிசி க்ரூஸர் பைக்!

எஞ்சின் குறித்த விபரம் தெரியவில்லை என்றாலும், ஸ்பை படங்களில் இரட்டை புகைப்போக்கி குழல்கள் இருப்பதால், இது இரண்டு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட பைக் மாடலாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ரகசிய சோதனை ஓட்டத்தில் ராயல் என்ஃபீல்டு 650 சிசி க்ரூஸர் பைக்!

தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இரட்டை சிலிண்டர் அமைப்புடைய 650சிசி எஞ்சின் பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

ரகசிய சோதனை ஓட்டத்தில் ராயல் என்ஃபீல்டு 650 சிசி க்ரூஸர் பைக்!

புதிய ஃப்ரேம் அமைப்பு மற்றும் கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய பைக் உருவாக்கப்பட்டு இருப்பதும் ஸ்பை படங்களின் மூலமாக உறுதியாகி இருக்கிறது.

ரகசிய சோதனை ஓட்டத்தில் ராயல் என்ஃபீல்டு 650 சிசி க்ரூஸர் பைக்!

இந்த பைக்கில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் இடம்பெற்றுள்ளன. ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இந்த அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொடுக்கப்படுவதும் இது முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரகசிய சோதனை ஓட்டத்தில் ராயல் என்ஃபீல்டு 650 சிசி க்ரூஸர் பைக்!

இந்த புதிய ராயல் என்ஃபீல்டு க்ரூஸர் பைக் மிக நீளமாகவும், தாழ்வான அமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் சற்றே பெரிய டயரும், பின்புறத்தில் அதைவிட அளவு சற்று குறைவான டயரும் உள்ளதும் தெரிய வந்துள்ளது. கால்களை வைப்பதற்கு வசதியாக ஃபுட்பெக்குகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பு: மாதிரிக்காக ராயல் என்ஃபீல்டு கான்செப்ட் கேஎக்ஸ் படங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Royal Enfield is planning to add a third 650CC bike in its line up and it will be a cruiser model.
Story first published: Monday, August 31, 2020, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X