மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு! ஆச்சரியத்தில் மூழ்கிய டூ-வீலர் சந்தை

சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வட மாநிலத்தின் குறிப்பிட்ட நகரத்தில் அமோகமான டிமாண்ட் நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு... ஆச்சரியத்தில் வியந்து நிற்கும் டூ-வீலர் சந்தை!!!

இந்தியர்களின் மனம் கவர்ந்த இருசக்கர வாகனங்களாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட நகர வாசிகளை மட்டும் சற்று கூடுதலாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் கவர்ந்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமாங்க, இந்தியாவின் மும்பை நகரத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டோர்சைக்கள் மிக அதிகளவில் விற்பனையாகிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு... ஆச்சரியத்தில் வியந்து நிற்கும் டூ-வீலர் சந்தை!!!

மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தில் ராயல் என்பீல்டு பைக்குகள் அமோகமாக விற்பனையாகியிருக்கின்றன. குறிப்பாக, தசேரா பண்டிகையை முன்னிட்டு இதுவரை 1,200க்கும் அதிகமான ராயல் என்பீல்டு பைக்குகள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக உறுதி வாய்ந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு... ஆச்சரியத்தில் வியந்து நிற்கும் டூ-வீலர் சந்தை!!!

இதுமட்டுமின்றி, ஒரே நாளில் 3,700 யூனிட் ராயல் என்பீல்டு பைக்குகளே அம்மாநிலம் (மஹாராஷ்டிரம்) முழுவதிலும் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுவும், தசேரா பண்டிகையை முன்னிட்டே டெலிவரி செய்யப்பட்டிருக்கின்றன. இதனால், நாட்டிலேயே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் அதிகம் விற்பனையாகும் நகரமாக மஹாராஷ்டிராவின் மும்பை நகரம் உருவெடுத்துள்ளது.

மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு... ஆச்சரியத்தில் வியந்து நிற்கும் டூ-வீலர் சந்தை!!!

இதில், அதிகபட்சம் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களே அதிகம் டெலிவரி செய்யப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, புல்லட் 350 மாடலும், ஹிமாலயன் மாடல்களும் அடுத்தடுத்த விற்பனை இடத்தைப் பிடித்திருக்கின்றன. தொடர்ந்து, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றான 650 ட்வின் பைக்குகளும் அதிகளவில் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு... ஆச்சரியத்தில் வியந்து நிற்கும் டூ-வீலர் சந்தை!!!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 92 விற்பனையகங்களை ராயல் என்பீல்டு இயக்கி வருகின்றது. இவற்றின் வாயிலாகவே இந்திய இருசக்கர வாகனச் சந்தையே பொறாமைக் கொள்ளும் வகையில் தசேரா பண்டிகையை முன்னிட்டு இருசக்கர வாகனங்களை ராயல் என்பீல்டு டெலிவரி கொடுத்திருக்கின்றது.

மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு... ஆச்சரியத்தில் வியந்து நிற்கும் டூ-வீலர் சந்தை!!!

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வாகன சந்தையுமே மிகப்பெரிய இன்னலில் சிக்கி தவித்தது. குறிப்பாக, பொதுமுடக்கம் மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நாட்களில் ஒரு யூனிட் வாகனங்கள்கூட விற்பனையாகாத நிலையே காட்சியளித்தது. இந்த நிலையில், தசேரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் விற்பனை மந்த நிலையில் லேசான விடுதலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு... ஆச்சரியத்தில் வியந்து நிற்கும் டூ-வீலர் சந்தை!!!

இதன் விளைவாக ராயல் என்பீல்டு நல்ல விற்பனை வளர்ச்சியை மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவல் பயத்தைப் போக்கும் வகையில் டிஜிட்டல் வர்த்தகத்தை (ஆன்லைன் வர்த்தகம்) ஊக்குவித்தது, நேரடி தொடர்பில்லா விற்பனை, சர்வீஸ் ஆன் வீல்ஸ் (வீட்டுக்கே வந்து பைக்கை சர்வீஸ் செய்யும் வசதி), ஆன்லைன் பண பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளைத் தொடங்கியது.

மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு... ஆச்சரியத்தில் வியந்து நிற்கும் டூ-வீலர் சந்தை!!!

இதுவும் மக்கள் மத்தியில் ராயல் என்பீல்டு தயாரிப்புகள் நல்ல வரவேற்பைப் பெற காரணமாக அமைந்திருக்கின்றது. இதுதவிர, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவையை வழங்கும் விதமாக சுமார் 800-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை சர்வீஸ் ஆன் வீல்களாக ராயல் என்பீல்டு பயன்படுத்தி வருகின்றது. பான் இந்தியா திட்டத்தின்கீழ் இதனை அந்நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.

மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு... ஆச்சரியத்தில் வியந்து நிற்கும் டூ-வீலர் சந்தை!!!

இதில், மஹாராஷ்டிராவில் மட்டுமே 262 சர்வீஸ் ஆன் வீல் பைக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மஹாராஷ்டிரா மீதான ராயல் என்ஃபீல்டின் இந்த சிறப்பு கவனமே மும்பை வாசிகளை இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகளவில் கவர்ந்துள்ளன.

மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு... ஆச்சரியத்தில் வியந்து நிற்கும் டூ-வீலர் சந்தை!!!

ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் மீட்டீயோர் எனும் மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் நவம்பர் மாதம் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலை ரீபிளேஸ் செய்யும் விதமாக இது களமிறங்க இருக்கின்றது.

மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு... ஆச்சரியத்தில் வியந்து நிற்கும் டூ-வீலர் சந்தை!!!

ரூ. 1.60 லட்சத்தில் இருந்து ரூ. 1.80 லட்சம் வரையிலான விலையில் இது எதிர்பார்க்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக் இந்தியாவில் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கும் ஹோண்டா ஹைனஸ் சிபி350 பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் அமர இருக்கின்றது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல பைக்கான கிளாசிக் 350-க்குமே போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Royal Enfield Delivered 1,200 Motorcycles In Mumbai. Read In Tamil.
Story first published: Saturday, October 31, 2020, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X