ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கி குவிக்கும் மலையாளிகள்... ஓ இதுதான் காரணமா..!

கேரளாவில் ஒரே நாளில் 1000 மோட்டார்சைக்கிள்களை டெலிவிரி செய்து ராயல் என்பீல்டு நிறுவனம் ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கி குவிக்கும் மலையாளிகள்... ஓ இதுதான் காரணமா..!

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதியில் இருந்து கேரளாவில் ஓணம் பண்டிக்கை கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி நிறைவு பெறவுள்ள இந்த விழா, கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவுகளினால் கடந்த ஆண்டுகளை போல் விமர்சையாக கொண்டாடப்படவில்லை.

ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கி குவிக்கும் மலையாளிகள்... ஓ இதுதான் காரணமா..!

வழக்கமாக ஓணம் பண்டிக்கை நாளில் தான் தங்களுக்கு விருப்பமான வாகனங்களை வாங்க மலையாளிகள் விரும்புவர். இதனால் இந்த இந்த சமயத்தில் தான் தயாரிப்பு நிறுவனங்களும் கேரளாவில் போட்டி கொண்டு விற்பனை மாடல்களை விற்பனை செய்யும்.

ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கி குவிக்கும் மலையாளிகள்... ஓ இதுதான் காரணமா..!

இந்த வகையில் தான் தற்போது இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு தனது டீலர்ஷிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் ஒரே நாளில் 1000 ராயல் என்பீல்டு பைக்குகள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கி குவிக்கும் மலையாளிகள்... ஓ இதுதான் காரணமா..!

இந்த 1000 பைக்குகளில் பிரபலமான கிளாசிக் 350, புல்லட் 350, ஹிமாலயன் மட்டுமில்லாமல் 650 ட்வின் பைக்குகளும் அடங்குகின்றன. டெலிவிரி பணிகள் முடுக்கிவிட்டது மட்டுமில்லாமல் நாடு முழுவதும் விற்பனை செய்துவரும் தனது தயாரிப்புகளில் அப்டேட்களையும் ராயல் என்பீல்டு நிறுவனம் கொண்டுவருகிறது.

ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கி குவிக்கும் மலையாளிகள்... ஓ இதுதான் காரணமா..!

இந்த வகையில் இந்நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக்கில் பிஎஸ்6 அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கிளாசிக் 350-க்கு மாற்று பைக் மாடலும் வடிவமைப்பு பணியில் உள்ளது. புதிய அறிமுகங்களாக மீட்டியோர் 350, ஹண்டர், ஷெர்பா மற்றும் புதிய 650சிசி பைக்குகள் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து எதிர்காலத்தில் வெளிவரவுள்ளன.

ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கி குவிக்கும் மலையாளிகள்... ஓ இதுதான் காரணமா..!

இவற்றில் முதல் பைக்காக இந்த செப்டம்பர் மாதத்தில் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என்ற மூன்று வேரியண்ட்களில் மீட்டியோர் 350 அறிமுகமாகவுள்ளது. இந்நிறுவனம் சிறிய பிஎஸ்6 பைக்குகளுக்கு ஜே ப்ளாட்ஃபாரத்தையும், பெரிய 650சிசி பைக்குகளுக்கு பி ப்ளாட்ஃபாரத்தையும் நம்பியிருக்கிறது.

ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கி குவிக்கும் மலையாளிகள்... ஓ இதுதான் காரணமா..!

புதிய அறிமுகங்களுக்கு இடையில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் இருந்த 500சிசி பைக்குகளின் தயாரிப்பை ஒவ்வொன்றாக நிறுத்தி வருகிறது. இந்த வகையில் நிறுத்தப்பட்ட கிளாசிக் 500 பைக்கிற்கு பெருமையளிக்கும் விதமாக அதன் கருப்பு எடிசனின் 1000 மாதிரிகள் ஐரோப்பாவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Royal Enfield Delivers 1000 bikes across the state of Kerela on Onam
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X