தயார் நிலையில் ராயல் என்பீல்டு மின்சார பைக்... கண் கவரும் ஸ்டைலில் முன் மாதிரி பைக்கின் தோற்றம்...

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மின்சார பைக் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தயார் நிலையில் ராயல் என்பீல்டு மின்சார பைக்... கண் கவரும் ஸ்டைலில் முன் மாதிரி பைக்கின் தோற்றம்...

உலகம் முழுக்க மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதையுணர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கவனத்தை மின்வாகன உற்பத்தியின் பக்கம் திருப்பி வருகின்றன. பல நிறுவனங்கள் ஏற்கனவே அதன் புதுமிக மின்சார வாகனங்களை அறிமுகம் செய்துவிட்டநிலையில், குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்கள் தற்போதே அவற்றை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.

தயார் நிலையில் ராயல் என்பீல்டு மின்சார பைக்... கண் கவரும் ஸ்டைலில் முன் மாதிரி பைக்கின் தோற்றம்...

இதில் ஒன்றாக மாறியிருக்கின்றது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டு, விரைவில் மின்சார மோட்டார்சைக்கிளை தயாரிக்கும் பணியில் இறங்கிவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலில், உற்பத்தி மாடலுக்கான மாதிரி பைக் தயார் நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

தயார் நிலையில் ராயல் என்பீல்டு மின்சார பைக்... கண் கவரும் ஸ்டைலில் முன் மாதிரி பைக்கின் தோற்றம்...

தற்போது வரை 300 சிசி-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை மட்டுமே குறிக்கோளாக வைத்து பைக்குகளை தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு, முதல் முறையாக முதல் முறையாக அதிக திறன் கொண்ட மின்சார இருசக்கர வாகனத்தை தயாரிக்க இருக்கின்றது. இதற்கான மாதிரி மாடலையே அந்நிறுவனம் தயார் தற்போது செய்திருக்கின்றது. விரைவில் அதனை உற்பத்தி மாடலாக உயர்த்தி, அதையே அது விற்பனைக்கும் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

தயார் நிலையில் ராயல் என்பீல்டு மின்சார பைக்... கண் கவரும் ஸ்டைலில் முன் மாதிரி பைக்கின் தோற்றம்...

இந்த பைக்குறித்த புகைப்படங்கள் மற்றும் தற்போது இணையத்தில் டிரெண்டாகத் தொடங்கியிருக்கின்றன. புல்லட் மாடலில் காட்சியளிக்கும் அந்த பைக்கில், ஃபோட்டான் என்ற கிராஃபிக் ஒட்டப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, பைக்கின் எஞ்ஜின் உள்ளிட்ட பகுதிகள் மின்சார பாகங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக பாக்ஸ் போன்ற அமைப்பிற்குள் நிறுவப்பட்டிருக்கின்றது.

தயார் நிலையில் ராயல் என்பீல்டு மின்சார பைக்... கண் கவரும் ஸ்டைலில் முன் மாதிரி பைக்கின் தோற்றம்...

இந்த தோற்றத்திலேயே எதிர்கால ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், ராயல் என்ஃபீல்டு களமிறக்க இருக்கும் மின்சார பைக்கில் என்ன மாதிரியான திறனுடைய பேட்டரி மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட இருக்கின்றது என்ற தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து, பைக்கின் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலும் ரகசியும் காக்கப்பட்டு வருகின்றது.

தயார் நிலையில் ராயல் என்பீல்டு மின்சார பைக்... கண் கவரும் ஸ்டைலில் முன் மாதிரி பைக்கின் தோற்றம்...

இருப்பினும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பாக இந்த மின்சார பைக் களமிறங்க இருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், அதன் ஆர்வலர்கள் மத்தியிலும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன வகையிலேயே பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வரத்தொடங்கியிருக்கின்றன.

தயார் நிலையில் ராயல் என்பீல்டு மின்சார பைக்... கண் கவரும் ஸ்டைலில் முன் மாதிரி பைக்கின் தோற்றம்...

இந்நிலையில், மணி கன்ட்ரோல் ஆங்கில தளத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த வினோத் தசாரி (ராயல் என்ஃபீல்டு - சிஇஓ), "மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் அது எப்போது என்பது இப்போதைக்கு கேள்வி குறிதான். இதற்கான முன் மாதிரி மாடல்களே தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இவையே மின்சார பைக்கின் அணியில் சேர்க்கப்பட இருக்கின்றன" என தெரிவித்தார்.

தயார் நிலையில் ராயல் என்பீல்டு மின்சார பைக்... கண் கவரும் ஸ்டைலில் முன் மாதிரி பைக்கின் தோற்றம்...

மின்வாகனச் சந்தைப் பற்றிய ஆய்விலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனிக் கவனம் செலுத்தி ஈடுபட்டு வருகின்றது. இந்தியாவில் டிவிஎஸ், பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் மின்சார இருசக்கர வாகனங்களை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டநிலையில், சுசுகி மற்றும் யமஹா போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் டூ-வீலர்களைக் களமிறக்க தயாராக இருக்கின்றன.

தயார் நிலையில் ராயல் என்பீல்டு மின்சார பைக்... கண் கவரும் ஸ்டைலில் முன் மாதிரி பைக்கின் தோற்றம்...

இந்த வரிசையிலேயே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது இணைந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி சில புதுமுக நிறுவனங்கள்கூட மின் வாகனங்களை இந்தியாவில் களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், ஏத்தர் எனர்ஜி, ரிவோல்ட், டார்க் மோட்டார்ஸ், ஒகினவா, ஆம்பியர், அல்ட்ராவைலட் மற்றும் இன்டெல்லிகார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் அதன் இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தையை தற்போது அதகளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தயார் நிலையில் ராயல் என்பீல்டு மின்சார பைக்... கண் கவரும் ஸ்டைலில் முன் மாதிரி பைக்கின் தோற்றம்...

இதுமட்டுமின்றி இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சில புதுமுக நிறுவனங்களும் விரைவில் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி சில வெளிநாட்டு நிறுவனங்களும்கூட இந்திய மின்சார வாகனச் சந்தையில் கால் தடம் பதிக்க விரும்புவதாக அறிவித்து வருகின்றன.

Most Read Articles

English summary
Royal Enfield Electric Bike Prototype Ready: Here Are All Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X