Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா 93 காலமானார்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
40 சதவீத சலுகையை வாரி வழங்கும் ராயல் என்பீல்டு! திகைத்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்! நம்பவே முடியல!
ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு 40 சதவீத சலுகையை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இளையவர்-முதியவர்கள், ஆண்கள்-பெண்கள் என ஒருத்தரையும் விட்டு வைக்காமல் தன் வசம் வளைத்துப் போட்டிருக்கும் இருசக்கர வாகனத்தில் முதன்மையான டூ வீலர்களாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன.

இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இதே சூழல்தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நிலவி வருகின்றது.
எனவேதான், இந்நிறுவனம் அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு அதன் தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றது.

அந்தவகையில், அண்மையில் இளம் பெண் ரைடர்களைக் கவர்கின்ற வகையில் அவர்களுக்கான பிரத்யேக உடை மற்றும் ரைடிங் கியர்களை ராயல் என்பீல்டு அறிமுகம் செய்தது.
இதுமட்டுமின்றி, விரைவில் பெண்கள் மற்றும் மெல்லிய தேகம் உடைய ஆண்கள் இயக்குகின்ற வகையிலான விலைக்குறைந்த பைக்கையும் அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இவ்வாறு, வாடிக்கையாளர்களை கவருவதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் பம்பரத்தைப் போன்று சுற்றிச் சுற்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், தற்போது மீண்டும் வாடிக்கையாளர்களைக் கவருகின்ற வகையில் ராயல் என்பீல்டு சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.

இது, அதன் ஆடை மற்றும் தலைக் கவசம் போன்ற ரைடிங் கியர்களுக்கானது ஆகும். 'எண்ட் ஆஃப் சீசன் சேல்' எனும் பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்மூலம் ரைடர்களுக்கான பிரத்யேக உடை முதல் பாதுகாப்பு கவசங்கள் வரை அனைத்திற்கும் 40 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட உள்ளது.

இந்த சலுகையை ராயல் என்ஃபீல்டு ஸ்டோர் அல்லது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு இருப்பதைப் போலவே அதன் ஆடைகளுக்கும் நல்ல வரவேற்பு சந்தையில் காணப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில்தான் இந்த டிமாண்டை கூடுதலாக்கும் வகையில் சிறப்பு ஆஃபரை அது வழங்கியிருக்கின்றது. இதன் மூலம் ராயல் என்பீல்டின், டீ-சர்ட், பெல்ட், டிரவுசர் மற்றும் ஹெல்மெட் போன்ற அனைத்தையும் சற்று குறைந்த விலையில் நம்மால் பெற முடியும்.

இவற்றை ராயல் என்பீல்டு நிறுவனம் ரூ. 700 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைச் செய்து வருகின்றன. இவை உயர் ரகத்தில் தயாரிக்கப்பட்டிருப்பதன் காரணத்தினாலயே இந்த உச்சபட்ச விலையில் அவை விற்கப்படுகின்றன.

அவற்றின் விலை பட்டியலை கீழே காணலாம்.
1. காட்டன் ரைடிங் ஜாக்கெட்டுகளின் விலை ரூ. 5,800
2. சம்மர் மெஷ் ரைடிங் ஜாக்கெட் விலை 7,000
3. மூன்று அடுக்கு; அனைத்து வானிலைகளிலும் சவாரி பயன்படக்கூடிய ஜாக்கெட் விலை ரூ. 14,000
4. சம்மர் மெஷ் ரைடிங் டிரவுசர் ரூ. 6,500
5. அனைத்து வானிலையிலும் பயன்படக்கூடிய டிரவுசர் ரூ. 9,500
6. சம்மர் ரைடிங் குலோவ்ஸ் ரூ. 2,500...

விலை பட்டியலின் தொடர்ச்சி...
7. லெதர் குளோவ்ஸ் ரூ. 3,300
8. முழு முக ஹெல்மெட் ரூ. 3,700
9. அரை முக தலைக்கவசம் ரூ. 2,700
10. ரூ. 9,900 -ரூ. 10,900 லைஃப் ஸ்டைல் லெதர் ஜாக்கெட்
11. டி-ஷர்ட் விலை ரூ. 700 - ரூ. 1,100
12. சட்டைகளின் விலை ரூ. 2,300 - ரூ. 2,500
13. ஷார்ட்ஸ் விலை ரூ. 1,500 - ரூ. 1,600
14. பாட்டம்ஸ் (ஜீன்ஸ் / டிரவுசர்) விலை ரூ. 2,400 - ரூ. 2,600

ஆகியவற்றிற்கே ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது சலுகையை வழங்கியிருக்கின்றது. இம்மாதிரியான சிறப்பு சலுகை திட்டத்துடன் புதிய பைக்கை விற்பனைக்கு களமிறக்கும் முயற்சியிலும் ராயல் என்பீல்டு ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், மிட்டியோர் மாடலை அது விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த நிறுவனத்தின்கீழ் விற்பனைக்கு வரவிருக்கும் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் கொண்ட முதல் பைக் இதுவே ஆகும். இத்துடன், கூடுதல் மலிவு விலை பைக்குகளையும் களமிறக்க அது திட்டமிட்டுள்ளது.